மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில்

கல்முனை ஸாஹிறா தேசியப் பாடசாலைக்கு

நல்லாட்சியில் நிரந்தர அதிபர்  நியமிக்கப்படமாட்டாரா?

கல்லூரியின் கடிதத் தலைப்பில் அதிபர் தனது சொந்த

 நலன் குறித்த முறைப்படுகளை எழுதுவதாகவும் குற்றச்சாட்டு!

கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலைக்கு நிரந்தர அதிபர் ஒருவர் இதுவரை நியமிக்கப்படாமல் இருப்பது ஏன் என கல்முனைப் பிரதேச புத்திஜீவிகளால்  கேள்வி எழுப்பப்படுகின்றது.
2014.01.01 ஆம் திகதி முதல் தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்ட ஒருவரே இன்று வரையும் இக்கல்லூரிக்கு தற்காலிக அதிபராகக் கடமை செய்து கொண்டிருக்கின்றார் என்றும் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு ஒருவரை மூன்று வருடங்களுக்கு மேலாக ஒரு தேசிய பாடசாலைக்கு தற்காலிக அதிபராக.வைத்துக் கொண்டிருப்பதற்கு காரணம்தான் என்ன என்றும் கேள்வி எழுப்பப்படுகின்றது
கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளரினால் 2014.01.01 ஆம் திகதி வழங்கப்பட்ட KM/ZEO/AO/GEN/2014 கடிதத்தின் பிரகாரம் தங்களது கடமைக்கு மேலதிகமாக 01.01.2014 ந் திகதி முதல் கமு/கமு ஸாஹிரா தேசிய பாடசாலைக்கு தற்காலிக அதிபராக தங்களை நியமிக்கின்றேன்.
இதற்கமைய கடமையேற்று அறிக்கை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன். தங்களது சம்பளம் வலயக் கல்வி அலுவல்கத்தில் வழங்கப்படும். எனச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளரின் கடிதப்படி கடமைக்கு மேலதிகமாக 01.01.2014 ந் திகதி முதல் கமு/கமு ஸாஹிரா தேசிய பாடசாலைக்கு  தற்போதய தற்காலிக அதிபர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
இவ்வாறு வேறு ஒரு கடமையில் உள்ள ஒருவரை மூன்று வருடங்களைக் கடந்தும் கல்முனையில் ஒரு பிரபல்யமான தேசிய பாடசாலைக்கு தொடர்ந்து தற்காலிக அதிபராக வைத்துக் கொண்டிருப்பதன் மர்மம் என்ன என்ற கேள்வி கல்முன கல்வி சமூகத்தினரால் வினவப்படுகின்றது.
1949.11.16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு கடந்த காலங்களில் பல சாதனைகள் புரிந்துள்ள கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலைக்கு இந்த நல்லாட்சியிலும் தகுதியான ஒரு நிரந்தர அதிபரை நியமிக்க முடியவில்லையா? என்ற கேள்வி கல்முனை, சாய்ந்தமருது கல்வி சமூகத்தால் எழுப்பப்படுகின்றது.
எழுத்துப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை என்பனவற்றின் மூலம் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலைக்கு முற்றிலும் தகுதியான சமூக உணர்வுள்ள ஒருவர் நிரந்தர அதிபராக நியமிக்கப்படல் வேண்டும் என்பதே மக்கள் விருப்பமாகும்.

இதேவேளை, இக்கல்லூரியில் தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டிருப்பவர் தனது நலன் குறித்த முறைப்படுகளை தனது சொந்த கடித தலைப்பிலோ அல்லது வெள்ளைத்தாளிலோ எழுதி அனுப்புவதற்குப் பதிலாக கல்லூரியின் நலனுக்காகப் பாவிக்கப்பட வேண்டிய கடிதத் தலைப்பில் எழுதிக் கொண்டிருப்பது ஒரு முறையற்ற செயல்பாடு என்றும் மேலதிகாரிகளால் கண்டிக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இதற்கு ஏன் முஸ்லிம் அரசியல்வாதிகள் கண்டும் காணாதவர்கள் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கல்முனைப் பிரதேச கல்விச் சமூகம் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top