சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்டுள்ள,
மோட்டார் சைக்கிள்களை
பதிவு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள
அமைச்சரவை அங்கீகாரம்
வரி செலுத்தாமல் சட்ட விரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 450CC ரக மோட்டார் சைக்கிள்களை என்ஜின் கொள்ளளவின் அடிப்படையில் பதிவுசெய்வதற்கு 2017-01-31 வரை அவகாசம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இக்காலப்பகுதிக்குள் குறித்த தொகையினை செலுத்தி 1,558 மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்துள்ளன. மேலும் 2,500 மோட்டார் சைக்கிள்களை பரீசிலிப்பதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில்,
அம்மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை முறையாக செய்து முடிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும் விதத்தில் மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்காக வழங்கப்பட்டடிருந்த காலப்பகுதியினை 2017-01-31இல் இருந்து 2017-03-31 வரை மேலும் இரண்டு மாதங்களில் நீடிப்பது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment