கலைஞர்களுக்கு சலுகை வழங்குவதற்காக
கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால்
வழங்கப்படுகின்ற நிதியுதவியினை
வழங்கும் செயன்முறை தொடர்பில்
அமைச்சரவை கவனத்தில் எடுப்பு
பலவீனமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட கலைஞர்களுக்கு சலுகை வழங்குவதற்காக கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற நிதியுதவியினை 5,000 ரூபாவிலிருந்து 10,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது.
அதனடிப்படையில் குறித்த சிலுகையினை வழங்குவதற்காக குறைந்த வருமானம் பெறும் கலைஞர்களை தெரிவு செய்வதற்காக செயன்முறையொன்றை உள்ளக அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன அவர்களினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.
குறித்த செயன்முறை தொடர்பில் அமைச்சரவையின் கவனத்திற் கொள்ளப்பட்டது.

0 comments:
Post a Comment