வழிதெரியாமல் தாமதமானது:
நீதிமன்றத்தில் சரணடைய தாமதமானது குறித்து பதில் அளித்த சுதாகரன், பெங்களூரு நருக்குள் வழி தெரியாமல் தாமதமானதாகக் கூறியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலாவும், இளவரசியும் நேற்று மாலை 5.15. மணியளவில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஆனால் அப்போது சுதாகரன் சரணடையவில்லை. நீதிபதியின் கண்டிப்பைத் தொடர்ந்து சுதாகரன் சரண் அடைந்தார்.
மாலை 6.37 மணிக்கு சுதாகரன் சிறப்பு நீதிமன்றத்துக்குள் வந்தார். ஏன் தாமதம்? என நீதிபதி கேட்டதற்கு, பெங்களூரு நகருக்குள் வழி தெரியாமல் தாமதமானதாக சுதாகரன் தெரிவித்துள்ளார்.
மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட வழக்கமான நடைமுறைகளுக்குப் பிறகு மாலை 6.50 மணிக்கு சுதாகரனும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு கைதி எண் 9236 வழங்கப்பட்டது.
தற்போதைக்கு இவர்களுக்கு இரண்டாம் வகுப்பு அறைகளே வழங்கப்பட்டுள்ளன. அந்த அறையில் மின் விசிறி, தொலைக்காட்சிப் பெட்டிகள் இருக்காது. கட்டில் மட்டுமே இருக்கும் என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
:)
ReplyDelete