சிறுவனுக்கு
கேக் ஊட்டிய ஜனாதிபதி!
கொழும்பு
டீ.எஸ்.சேனநாயக்கா கல்லூரியின்
பொன்விழா ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
இந்த
நிகழ்வில் சிறுவன்
ஒருவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேக்
ஊட்டியுள்ளார்.
தற்போது
குறித்த புகைப்படம்
வைரலாகி வருகின்றது.
இதேவேளை, இந்த
நிகழ்வில் ஜனாதிபதிக்கு
நினைவுப் பரிசும்
வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்வி
அமைச்சின் நிதியொதுக்கீட்டில்
டீ.எஸ்.சேனநாயக்கா கல்லூரியில்
நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி
கட்டிடத்தின் நினைவுப் பலகையை ஜனாதிபதி அவர்கள்
திறந்து வைத்தார்.
பொன்விழாவுக்காக
வெளியிடப்படும் ஞாபகார்த்த முத்திரை மற்றும் முதல்நாள்
தபாலுறை தபால்,
தபால் சேவைகள்
மற்றும் முஸ்லிம்
சமய விவகார
அமைச்சர் அப்துல்
ஹலீம் அவர்களால்
ஜனாதிபதி அவர்களிடம்
கையளிக்கப்பட்டது.
கல்லூரி
அதிபர் ஏ.எம்.எம்.ரத்னாயக்க அவர்களால்
பொன்விழா சஞ்சிகை
மற்றும் நினைவுப்
பரிசு ஜனாதிபதி
அவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
சமய
குருமார்கள், அமைச்சர்களான அகில விராஜ் காரியவசம்,
சுசில் பிரேம
ஜயந்த, எரான்
விக்ரமரத்ன, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய
மாணவர்கள், பெற்றௌர் உள்ளிட்ட பெருமளவானோர் நிகழ்வில்
கலந்து கொண்டனர்.




0 comments:
Post a Comment