காலதாமதம் செய்தால் தற்கொலை செய்து கொள்வேன்!
ஆளுநருக்கு சசிகலா கடிதம்
நான் கடிதமே எழுதவில்லை... அது போலி' - சசிகலா
அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா பெயரில் தமிழக ஆளுநருக்கு பொய்யான கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அதிமுக தலைமையகம் குற்றம் சாட்டியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் ஆளுநருக்கு, அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா அனுப்பியதாக ஒரு போலி கடிம் வெளியாது. அதில், என்னால் ஓரளவுக்கு தான் பொறுமையாக இருக்க முடியும், இனியும் காலதாமதம் செய்தால் எனது சாவுக்கு நீங்கள் தான் காரணம் என எழுதி வைத்து கொண்டு தற்கொலை செய்து கொள்வேன் என சசிகலா எழுதியாக வெளியிடப்பட்டது.
இது குறித்து வி.கே.சசிகலா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது,
'நான் ஆளுநருக்கு எழுதியதாக ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அது போலியான ஒன்று. நான் அப்படி ஒரு கடிதமே எழுதவில்லை. இதுபோன்ற சலசலப்பு புதிதல்ல. பெண் ஒருவர் அரசியலில் இருப்பது மிகவும் கஷ்டமான விஷயம். இந்த சூழ்ச்சிக்கு பின்னணி யார் என நன்றாக தெரியும். மீதமுள்ள நான்கரை ஆண்டு கால ஆட்சியை அ.தி.மு.க சிறப்பாக நடத்தும். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது' என்று கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment