தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பாக

விசேட கலந்துரையாடல்

தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பாக உருவாகியுள்ள சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு அது தொடர்பாக நியமிக்கப்படும் விசேட குழுவின் சிபாரிசுக்களை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் அரச பல் வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளின் குழுவினருடன் இன்று 11 ஆம் திகதி முற்பகல் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது..
மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பாக உருவாகியுள்ள சிக்கல் தொடர்பாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தமது கருத்துக்களை ஜனாதிபதிக்கு தெரிவித்ததுடன் இப்பிரச்சினைக்கு தீர்வு காணும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்களாக கருதப்படும் ஆலோசனைத் தொகுதிகள் இரண்டினையும் ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர் வைத்திய கலாநிதி பீ.எஸ்.எம்..பீ. பாதெனிய மற்றும் அதன் செயலாளர் வைத்திய கலாநிதி எச்.என்.டீ. சொய்சா, அரச பல் வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்திய கலாநிதி ஆனந்த ரத்நாயக, அதன் செயலாளர் வைத்திய கலாநிதி விபுல விக்கிரமசிங்க உள்ளிட்டோர் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top