மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளரும்,
கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சின் செயலாளரும்
அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்
மூதூர்
வலயக்கல்விப் பணிப்பாளரை இடமாற்றம் செய்யுமாறு கடந்த
13ம் திகதி
திங்கட்கிழமை முதல் அவ்வலயத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள்
மேற்கொண்ட சுகவீன
லீவுப் போராட்டத்தின்
போது நிலைமை
கட்டுக்கடங்காமல் போனதை அடுத்து மூதூர் வலயக்கல்விப்
பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரை
அங்கிருந்து அகற்றுவதாக கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சின்
செயலாளர் அளித்த
தொலைபேசி மூலமான
வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என
இலங்கை கல்வி
நிருவாக சேவை
அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்க செயலாளர்
ஏ.எல்.முஹம்மட் முக்தார்
கிழக்கு மாகாணக்கல்வி
அமைச்சின் செயலாளரிடம்
கோரிக்கை விடுத்துள்ளார்.
இது
தொடர்பாக அவர்
கிழக்கு மாகாணக்கல்வி
அமைச்சின் செயலாளருக்கு
அனுப்பி வைத்துள்ள
தொலைநகல் செய்தியில்
குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
மூதூர்
வலயக்கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றும்
எம்.கே.எம்.மன்சூர்
மூதூர் வலயத்திற்குட்பட்ட
அதிபர், ஆசிரியர்களை
அவமதிப்பதாகவும், அவர்களை நையாண்டி பண்ணுவதாகவும், அவர்களது
மதக்கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் தெரிவித்து கடந்த
13ம் திகதி
முதல் சுகவீன
லீவுப்போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டதுடன்
மூதூர் வலயக்கல்வி
அலுவலகத்திற்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இவ்வார்ப்பாட்டம்
கடந்த 14ம்
திகதி கட்டுக்கடங்காமல்
போனதையடுத்து மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளர் மன்சூர்
அவரது அலுவலக
உதவிக்கல்விப் பணிப்பாளர் நௌசாத் என்பவருடன் கொழும்பிலிருந்தவாறு
தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் இனிமேல்
மூதூர் வலயக்கல்விப்
பணிப்பாளராக கடமையாற்றப் போவதில்லை எனவும் தான்
மூதூர் வலயக்கல்விப்
பணிப்பாளர் பதவியை இராஜினாமா செய்வதாகவும் கிழக்கு
மாகாணக்கல்வி அமைச்சின் செயலாளருக்கு தெரிவித்திருப்பதாகவும் கூறியிருந்தார்.
இதனை
ஏற்காத ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்ட ஆசிரியர்கள்
இதற்கான உறுதியுரையை
கிழக்கு மாகாணக்கல்வி
அமைச்சின் செயலாளர்
எம்மிடம் தொடர்பு
கொண்டு வழங்க
வேண்டுமென கோரிக்கை
விடுத்தனர். இதனையடுத்து கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சின்
செயலாளர் திரு.
அசங்க அபேவர்த்தன
ஆர்ப்பாட்டககாரர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு
ஜனாப். மன்சூரை
மூதூர் வலயக்கல்விப்
பணிபபாளர் பதவியிலிருந்து
உடனடியாக அகற்றுவதாகவும்,
அது தொடர்பாக
அவர் தனக்கு
அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து
ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியடைந்தனர்.
இதன்
பின்னர் மூதூர்
வலயக்கல்விப் பணிப்பாளர் ஒப்பந்தக்காரர்களையும்,
ஒப்பந்தக்காரர்களது வேலையாட்களையும் ஏவிவிட்டு
தன்னை மூதூர்
மக்கள் வருமாறு
கேட்பதாக கல்வியுலகிற்கு
மேளதாளங்களுடன் 16ம் திகதி அலுவலகத்திற்கு சமூகமளித்துள்ளார்.
இவரது இந்நடவடிக்கை
மூதூர் ஆசிரியர்,
அதிபர்களுக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. 14ம் திகதி தான் மூதூர்
வலயக்கல்விப் பணிப்பாளர் பதவியை இராஜினாமா செய்துவிட்டதாகத்
தெரிவித்த அவர்
16ம் திகதி
மேளதாளங்களுடன் வருகிறார் என்றால் யாரை ஏமாற்ற
முற்படுகிறார் என்பதனை சிந்திக்க வேண்டியுள்ளது.
ஒரு
வலயத்தின் கல்வியை
தீர்மானிப்பது ஒப்பந்தகாரர்களல்ல. மாறாக அதிபர்களும், ஆசிரியர்களுமாவர்.
அதிபர்களையும், ஆசிரியர்களையும் பகைத்துக்கொண்டு
ஒரு வலயக்கல்விப்
பணிப்பாளர் கடமையில் இருக்க முடியுமா என்பதனை
சிந்திக்கத் தெரியாத ஒரு வலயக்கல்விப் பணிப்பாளராக
மூதூர் வலயக்கல்விப்
பணிப்பாளர் இருப்பதையிட்டு மிகவும் வேதனையும், வெட்கமும்
அடைகிறோம். இவர் இவ்வாறு மூதூரில் மட்டும்தான்
கடமையாற்ற முடியும்
என்பதற்கு பல
மறைமுகக் காரணிகள்
இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். செல்வதற்கு இடம்
எதுவுமில்லாத நிலையில் அவர் தவிப்பதை நாம்
நன்கு அறிவோம்.
இந்நிலையில்
அவரைக்காப்பாற்ற வேண்டியது அவருக்குத் தவறாக வழிகாட்டிய
கிழக்கு மாகாண
பிரதம சட்ட
ஆலோசகரும், இன்னும் சில முக்கியஸ்தர்களுமாவர். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
என்பதற்கொப்ப அவர் கடந்த சில வருடங்களாக
அதாவது அட்டாளைச்சேனை
ஆசிரியர் கலாசாலையிலும்
அதன் பின்னர்
2007ம் ஆண்டு
மாகாணக்கல்வித் திணைக்களத்தில் கடமையாற்றத்
தொடங்கிய காலம்
தொட்டு செய்துவரும்
அடாவடித்தனங்களுக்கு உரிய பரிசை
மூதூர் வலயத்தில்
அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்பதே எமது கருத்து.
கிழக்கு மாகாணத்தில்
எந்தவொரு வலயக்கல்விப்
பணிப்பாளருக்கும் நடைபெறாத சம்பவங்கள் மூதூர் வலயக்கல்விப்
பணிப்பாளருக்கெதிராக இடம்பெற்று வருகின்றன.
எனவே,
மூதூர் வலயக்கல்வி
அலுவலகப் பிரிவுக்குட்பட்ட
பாடசாலை மாணவர்களினதும்,
ஆசிரியர்களினதும் நன்மை கருதி ஜனாப். மன்சூரும்,
கிழக்கு மாகாணக்கல்வி
அமைச்சின் செயலாளரும்
வாக்குறுதியளித்தவாறு கிழக்கு மாகாண
இலங்கை கல்வி
நிருவாக சேவை
அதிகாரிகளின் கௌரவத்தைப் பாதுகாக்கும் நோக்கில் நிலைமை
பாரதூரமாக மாறுவதற்கு
முன்னர் ஜனாப்.
மன்சூரை அங்கிருந்து
அகற்ற வேண்டுமென
கேட்டுக்கொள்கிறோம் என கேட்டுள்ளார்.
0 comments:
Post a Comment