சர்ச்சைக்குரிய மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளரை
மார்ச் முதலாம் திகதியுடன் மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளர்
பதவியிலிருந்து அகற்ற கிழக்கு முதலமைச்சர் வாக்குறுதி!
கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சர் மன்சூருக்கு ஆதரவா?
(அஸ்லம்)
சர்ச்சைக்குரிய
மூதூர் வலயக்கல்விப்
பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரை
மூதூர் வலயக்கல்விப்
பணிப்பாளர் பதவியிலிருந்து மார்ச் மாதம் 01ம்
திகதியுடன் விலக்கிக் கொள்வதற்கு கிழக்கு மாகாண
முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் தலைமையில் நேற்று
(21) நடைபெற்ற மூதூர் வலய ஆசிரியர்கள், கிழக்கு
மாகாணக்கல்வி அமைச்சர் மற்றும் மாகாண சபை
உறுப்பினர்களுடனான உயர்மட்டக் கலந்துரையாடலின்
போது வாக்குறுதியளிக்கப்பட்டதாக
இலங்கை ஆசிரியர்
சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளரும், மட்டக்களப்பு
மாவட்ட செயலாளருமான
பீ.உதயரூபன்
தெரிவித்தார்.
நேற்று
காலை மூதூர்
வலயப்பாடசாலைகளைச் சேர்ந்த சுமார்
700ற்கு மேற்பட்ட
ஆசிரியர்கள் சுகவீன லீவுப் போராட்டத்தில் ஈடுபட்டதன்
காரணமாக மூதூர்
வலயப்பாடசாலைகள் இயங்கவில்லை. ஆசிரியர்கள் வரவின்மை காரணமாக
பாடசாலைக்குச் சென்ற மாணவர்கள் வீடுகளுக்குத் திரும்பிச்
சென்றனர்.
மூதூர்
அக்கரைச்சேனை ஜூம்ஆப் பள்ளிவாசல் முன்பாக ஒன்றுகூடிய
200ற்கு மேற்பட்ட
ஆசிரியர்கள் மூதூர் வலயக்கல்வி அலுவலகத்திற்குச் சென்று பின்னர் அங்கிருந்து கிழக்கு
மாகாணக்கல்வி அமைச்சை நோக்கி வாகனங்களில் சென்று
கிழக்கு மாகாணக்கல்வி
அமைச்சை முற்றுகையிட்டனர்.
இதன்போது மூதூர்
வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரை உடனடியாக
இடமாற்றம் செய்யுமாறும்,
ஆசிரியர்களின் கௌரவத்தை பாதுகாத்துத் தருமாறும் கோரிக்கை
விடுத்தனர்.
இதன்போது
ஆசிரியர்களைச் சந்தித்த கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சின்
செயலாளர் திரு.
அசங்க அபேவர்த்தன
கிழக்கு மாகாணக்கல்வி
அமைச்சர் மூதூர்
வலயக்கல்விப் பணிப்பாளரை இடமாற்றம் செய்யுமாறு தனக்கு
இன்னும் அறிவுறுத்தல்
வழங்கவில்லை எனவும், அவ்வாறு வழங்கிய பின்
அவரை உடனடியாக
இடமாற்றம் செய்வதாகவும்
கூறினார். அதன்போது
ஆசிரியர்கள் நீங்கள் 14ம் திகதி அளித்த
வாக்குறுதி என்னாயிற்று என வினாவினர். அதன்போது
கிழக்கு மாகாணக்கல்வி
அமைச்சர் மூதூர்
வலயக்கல்விப் பணிப்பாளரை இடமாற்றம் செய்வதை தாமதிக்குமாறு
கேட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து
ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் கிழக்கு மாகாண சபையை
முற்றுகையிட்டு கிழக்கு மாகாண சபை அமர்வு
இடம்பெற்றுக் கொண்டிருந்த போது மூதூர் வலயக்கல்விப்
பணிப்பாளரை இடமாற்றம் செய்யுமாறும், கிழக்கு மாகாணக்கல்வி
அமைச்சர் இவருக்கு
ஆதரவளிப்பதையும் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனையடுத்து
முதலமைச்சர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களில்
10 பேரை அழைத்து
உரையாடினார். இதன்போது கிழக்கு மாகாண கல்வி
அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி மாகாண
சபை உறுப்பினர்களான
ஆர்.எம்.அன்வர், லாஹிர்
போன்றோர் உடனிருந்தனர்.
இக்கலந்துரையாடலின்
போது கிழக்கு
மாகாணக்கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி மூதூர் வலயக்கல்விப்
பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரை
ஆதரிக்கும் விதத்தில் கருத்துத் தெரிவித்ததும் அதிபர்,
ஆசிரியர்களை அவர் அவமதித்ததை ஆதரிக்கும் விதத்தில்
கருத்துத் தெரிவித்து
மன்சூரின் நடவடிக்கையை
நியாயப்படுத்த முற்பட்ட போது ஆத்திரமடைந்த ஆசிரியர்கள்
மேசையில் அடித்து
கல்வியமைச்சரை நோக்கி கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை
மேற்கொண்டனர். இதன்போது ஒரு ஆசிரியர் தன்னை
வலயக்கல்விப் பணிப்பாளர் மன்சூர் எவ்வாறு அவமானப்படுத்தினார்
என்பதை கண்ணீர்
மல்க எடுத்துக்கூறினார்.
இதேபோன்று இன்னும்
ஒரு ஆசிரியர்
தான் ஒரு
இஸ்லாமிய மார்க்க
பக்தியுள்ளவனாக இருப்பதாகவும், ஐவேளைத் தொழுகையை முறையாகப்
பின்பற்றி வருபவனாகவும்
இருந்தபோதும் மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளரை தான்
சந்திக்கச் சென்ற சமயம் தனது தொப்பியைக்
கழற்றுமாறும், தாடியi அகற்றுமாறும், தனது ஜூப்பாவை
அகற்றிவிட்டு வருமாறும் தனக்கு உத்தரவிட்டதாக அழுதவாறு
தெரிவித்தார்.
இதனை
செவிமடுத்த முதலமைச்சர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராக
இவ்வாறான ஒரு
வலயக்கல்விப் பணிப்பாளர் மூதூரிலிருப்பதை
ஏற்றுக்கொள்ள முடியாது ஏனெனில் மூதூர் முஸ்லிம்கள்
கடந்த யுத்த
காலத்தில் கடுமையாகப்
பாதிக்கப்பட்டவர்கள், இங்கு கற்பிக்கும்
ஆசிரியர்கள் தியாக உணர்வு கொண்டவர்கள் இவர்களை
அவமதிப்பதை எக்காரணத்திற்காகவும் அனுமதிக்க
முடியாது எனக்கருத்து
தெரிவித்து மார்ச் 01ம் திகதியுடன் அவரை
மூதூர் வலயக்கல்வி
அலுவலகத்திலிருந்து இடமாற்றம் செய்வதாக
ஆசிரியர்களுக்கு வாக்குறுதியளித்தார். அத்துடன்
இவரது நடவடிக்கை
பற்றி விசாரணை
செய்யுமாறும் கல்வியமைச்சு அதிகாரிகளுக்கு
உத்தரவிட்டார்.
கிழக்கு
மாகாண கல்வியமைச்சர்
தண்டாயுதபாணி மாகாணக்கல்விப் பணிப்பாளராக
கடமையாற்றிய சமயம் திரு. மன்சூர் அவரின்
கீழ் மேலதிக
மாகாணக்கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றியதுடன்
தண்டாயுதபாணி அவர்களின் மகளுக்கு விலங்கியல் பாடத்தை
கற்றுக்கொடுத்தவராவார். அதன் காரணமாக
திரு. மன்சூரின்
மீது இயல்பாகவே
கல்வியமைச்சருக்கு பாசம் உள்ளது.
திரு.
தண்டாயுதபாணி அவர்கள் மாகாணக்கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய
சமயம் வடமாகாண
சபை திருகோணமலை
வரோதய நகரில்
இயங்கி வந்தது.
அப்போதிருந்த சூழ்நிலையில் மாலை 06 மணிக்குப் பின்னர்
வடமாகாண சபைக்குரிய
வாகனங்கள் வட
மாகாண சபை
வளாகத்தினுள் நிறுத்தி வைக்கப்படுவதில்லை.
கொழும்பு போன்ற
தூர இடங்களிலிருந்து
வரும் வட
மாகாண சபைக்குரிய
வாகனங்கள் கிழக்கு
மாகாணக்கல்வித் திணைக்கள வளவினுள் நிறுத்தி வைக்கப்படுவது
வழமையாகும்.
இவ்வாறு
நிறுத்தி வைக்கப்பட்ட
இரு வாகனங்களின்
டயர்கள் குத்தி
சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அக்காலப்பகுதியில்
இடம்பெற்றது. இது தொடர்பான விசாரணை இடம்பெற்ற
போது இதன்
பின்னணியில் மேலதிக மாகாணக்கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய
திரு. மன்சூர்
இருந்தமை தெரிய
வந்தது. ஆயினும்
இவருக்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்கு மாகாணக்கல்விப் பணிப்பாளராகக்
கடமையாற்றிய தண்டாயுதபாணி தவிறியிருந்தார்.
இதனை தற்போது
ஆசிரியர்கள் நினைவு கூருகின்றனர்.
திரு.மன்சூரை மூதூர்
வலயக்கல்விப் பணிப்பாளராக நியமிப்பதற்கும்
சிபாரிசு செய்தவர்
திரு. தண்டாயுதபாணி
அவர்களாவார் என்பதனையும் ஆசிரியர்கள் மறக்கவில்லை. எவ்வாறாயினும்
தற்போதைய கல்வி
அமைச்சர் ஒரு
ஆசிரியராக, பாடசாலை அதிபராக, கொத்தணி அதிபராக,
வலயக்கல்விப் பணிப்பாளராக, மாகாணக்கல்விப்
பணிப்பாளராக, பிரதிக்கல்விச் செயலாளராக, இலங்கை தமிழராசிரியர்
சங்கத் தலைவராக
இருந்த அனுபவமுடையவர்.
அவ்வாறான ஒருவர்
ஆசிரியர்களை அவமதிக்கும் மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளருக்கு
ஆதரவாக இருப்பதும்
அவரது நடவடிக்கைகளை
தட்டிக்கேட்காதிருப்பதும், எல்லாவற்றிற்கும் மேலாக தமிழர்களுக்கென உருவாக்கப்பட்ட மூதூர்
வலயக்கல்வி அலுவலகத்தை தாரை வார்த்திருப்பது எவ்வகையில்
நியாயம் என
தொழிற்சங்கங்களும், அதிபர், ஆசிரியர்களும்
கேள்வி எழுப்புகின்றனர்.
0 comments:
Post a Comment