மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளர் குற்றமற்றவர் எனின்
சம்மாந்துறை வலயத்திற்கு மீண்டும் அனுப்பி வைக்குமாறு
மூதூர் கல்வி வலய ஆசிரியர்கள் கோரிக்கை
(அஸ்லம்)
சர்ச்சைக்குரிய
மூதூர் வலயக்கல்விப்
பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர்
சம்மாந்துறையில் கடமையாற்றிய போது மேற்கொண்ட தளபாட
மோசடி தொடர்பான
விசாரணையில் குற்றமற்றவர் எனின் அவரை மீண்டும்
சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு இடமாற்றம் செய்யுமாறு
மூதூர் கல்வி
வலய ஆசிரியர்கள்
நேற்று
(21) கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சரை சந்தித்த போது
ஆவேசத்துடன் கோரிக்கை விடுத்தனர்.
கிழக்கு
மாகாணக்கல்வி அமைச்சர் திரு. தண்டாயுதபாணி மூதூர்
வலயக்கல்விப் பணிப்பாளர் மன்சூரை ஆதரித்து கருத்து
வெளியிட்ட சமயம்
அவர் என்ன
காரணத்திற்காக சம்மாந்துறை கல்வி வலயத்திலிருந்து கிழக்கு
மாகாணக்கல்வி அமைச்சிற்கு இணைப்புச் செய்யப்பட்டார் என்ற
விடயத்தை எடுத்துக்கூறி
அவருக்கெதிராக தற்போது முறைசார் விசாரணை இடம்பெற்று
வருவதை நீங்கள்
அறியவில்லையா? இவ்வாறான ஒருவரை மூதூர் வலயத்திற்கு
வலயக்கல்விப் பணிப்பாளராக நியமனம் செய்து மூதூர்
வலயத்தின் கல்வியை
கசாப்புக்கடைக்காரர்களிடமும், கட்டிட ஒப்பந்தக்காரர்களிடமும்
வழங்கியுள்ளீர்களா? எனக் கேள்விக்கு
மேல் கேள்வி
தொடுத்தனர்.
மூதூர்
வலயக்கல்விப் பணிப்பாளர்களாகக் கடமையாற்றிய
திரு. விஜயானந்தமூர்த்தி,
செல்வி. அகிலா
ஆகியோர் என்ன
காரணத்திற்காக இடமாற்றம் செய்தனர் என்ற கேள்வியையும்
அவரிடம் தொடுத்தனர்.
இவ்வேளையில் அவர் குற்றமற்றவர் எனின் அவரை
மீண்டும் சம்மாந்துறை
வலயக்கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யுமாறும், மூதூரையும்,
மூதூர் மக்களின்
உணர்வையும் மதியாத ஒருத்தர் எமக்கு அவசியமில்லை
எனவும் தெரிவித்ததுடன்
சென்ற இடங்களில்
எல்லாம் பிரச்சினைகளை
ஏற்படுத்தும் இவருக்கு என்ன நடந்தது என்பது
பற்றி உளநல
விசேட வைத்திய
நிபுணர்களைக் கொண்டு ஆராய வேண்டும் எனவும்
கேட்டுக் கொண்டனர்.
இவர்
மூதூர் வலயக்கல்வி
அலுவலகத்தில் வலயக்கல்விப் பணிப்பாளராகக்
கடமையேற்றதன் பின்னர் மூதூர் மக்களுக்கு நன்கு
சேவையாற்றிய மூதூரின் கல்விமான் சட்டத்தரணி, பிரதிக்கல்விப்
பணிப்பாளர் ஜவாத் சேர் இங்கிருந்து ஏன்
இடமாற்றம் பெற்றுச்
சென்றார் என்பதனையும்
ஆராய வேண்டும்.
வலயங்களில் நன்கு ஆசிரியர்களுடன் நெருங்கி கடமையாற்றுபவர்களை
இவருக்குப் பிடிப்பதில்லை என்பது வரலாறு. இவ்வாறான
ஒரு சம்பவம்
இவர் சம்மாந்துறை
கல்வி வலயத்தில்
கடமையாற்றிய போது அங்கு ஆசிரியர்கள், அதிபர்களுடன்
நெருங்கி கடமையாற்றிய
ஒரு பிரதிக்கல்விப்
பணிப்பாளரின் காரியாலய அறையை உடைத்து இடமாற்றம்
பெற்றுச்செல்ல தூண்டியவர்.
அதுமட்டுமன்றி
இவர் சம்மாந்துறையில்
கடமையாற்றிய போது சம்மாந்துறை ஹிஜ்றா சந்தியில்
நின்றுகொண்டு ஆசிரியர்களை கள்வர்கள் என்று ஊரவர்களிடம்
காட்டிக்கொடுத்தவர். இவ்வாறான ஒருவர் மூதூரிலும்
இருந்து கொண்டு
ஆசிரியர்களை நையாண்டி பண்ணுகிறார் என்பதை அமைச்சர்
அறிவாரா? எனவும்
கேள்வி தொடுத்தனர்.
தற்போதைய
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம்
என்பவர் அவ்வலயத்திற்கு
கடமை புர்pயும் (Coverup
duty) என்ற அடிப்படையில் தகுதியான ஒருவர் நியமிக்கப்படும்
வரை என்ற
நிபந்தனையுடன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment