மகாவலி இடக்கரைத் தாழ் பள்ளத்தாக்கு விருத்திக்
கருத்திட்ட செயற்திட்டத்தை செயற்படுத்துவதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா மற்றும் கந்தளாய் ஆகிய பிரதேச செயலக பிரதேசத்தையும், பொலன்னறுவை மாவட்டத்தின் மெதிரிகிரிய பிரதேச செயலக பிரதேசத்தையும் உள்ளடக்கும் வகையில், 4,000 ஏக்கர் காணிக்காக சிறுபோக மற்றும் பெரும்போகங்களில் நீரினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில், 6,250 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் 'மகாவலி இடக்கரைத் தாழ் பள்ளத்தாக்கு விருத்திக் கருத்திட்ட' செயற்திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பில் நீர்ப்பாசன மற்றும் நீர்வளங்கல் முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment