பாகிஸ்தானில்
தலிபான்களின் ஆதிக்கம் மிகுந்த பலுசிஸ்தான் மாகாணத்தில்
இன்று தீவிரவாதிகள் நடத்திய சக்திவாய்ந்த வெடிகுண்டு
தாக்குதலில் நான்கு பொலிஸார் உட்பட 11 பேர் உடல்
சிதறி உயிரிழந்தனர்.
பலுசிஸ்தான்
மாகாணத்தின் தலைநகரான குவெட்டா நகரின் மையப்பகுதியில் உள்ள
பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலுவலகத்தின் அருகே
வந்த சந்தேகத்துக்குரிய காரை பொலிஸார் தடுத்து
நிறுத்தியபோது இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக
உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
தாக்குதலில்
நான்கு பொலிஸார் உட்பட 11 பேர் உடல்
சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பாதுகாப்பு படையை சேர்ந்த 9 பேர்
உட்பட 20 பேர் படுகாயங்களுடன்
ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக
இருப்பதால் இந்த தாக்குதலில் பலி
எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
0 comments:
Post a Comment