மத மற்றும் இன ரீதியான வெறுப்புணர்வு பிரசாரங்களை சமூக வலைதளங்கள் ஊடாக முன்னெடுக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வு பிரிவு நடவடிக்கை
மத மற்றும் இன ரீதியான வெறுப்புணர்வு பிரசாரங்களை சமூக வலைதளங்கள் ஊடாக தனியாக அல்லது குழுக்களாக முன்னெடுக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வு பிரிவு நடவடிக்கை எடுக்கவுள்ளது.
சமூக வலைதளங்களில் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பவர்கள் குறித்து குற்றப் புலனாய்வு பிரிவினர் கண்காணிக்க உள்ளனர்.
பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினருடன் இணைந்து நடத்திய கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் ஜகத் விஜேசேகர கூறியதாக ஆங்கில ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் வெளியிடப்படும் பதிவுகள், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் மற்றும் இணைய குற்றங்கள் தொடர்பான பிரிவினர் தீவிவரமாக கண்காணித்து வருவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதங்கள் மற்றும் இனங்களுக்கு இடையே ஏற்படும் முறுகல் நிலையைத் தணிக்கும் ஒரு நடவடிக்கையாகவே, அரசாங்கம் இதை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment