தம்புள்ள அரச வைத்தியசாலையில் இன்று (27) மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையொன்றின் மூலம் 62 வயதுடைய நபர் ஒருவரின் வயிற்றிலிருந்து 10 கிலோகிராம் எடையுடைய கட்டியொன்றை வைத்தியர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
மெல்சிறிபுரவைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு சத்திர சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் தனது வயிற்றில் வலி உள்ளதாக தெரிவித்தே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சத்திர சிகிச்சையின் பின்னர் அவர் ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும் அவ்வைத்தியசாலையின் டாக்டர் அஜித் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top