பாகிஸ்தானில் எரிபொருள் லொறி வெடித்து தீ : 123 பேர் பலி
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பகவ்ப்பூர் நகரில் எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று திடீர் என வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் சுமார் 123 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று காலை எண்ணெய் ஏற்றிச்சென்ற டேங்கர் லொறியானது சாலையின் வளைவில் திரும்பும் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால், லொறியிலிருந்த எண்ணெய் சாலையில் ஆறாக ஓடியது. இதையறிந்த, அப்பகுதி கிராம மக்கள் கையில் வாளிகளுடன் எண்ணெய் அள்ள லாரியை முற்றுகையிட்டனர்.
100-க்கும் அதிகமானோர் லாரியிலிருந்து சிந்திய எண்ணெயை அள்ளிக்கொண்டிருக்கும் போது, எதிர்பாராதவிதமாக லொறி தீப்பிடித்து எரிந்தது.
இதனால், லொறியைச் சுற்றியிருந்த 123 பேர் உடல்கருகி பரிதாபமாக பலியாகினர். 75 பேர் தீக்காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தின் போது லொறியின் அருகே இருந்த 6 கார்கள் மற்றும் 12 பைக்குகள் எரிந்து நாசமாகின. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோரில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
0 comments:
Post a Comment