போரை வெற்றிக் கொண்ட இராணுவத்தினரை சமகால அரசாங்கம் தொந்தரவு செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேற்குலக நாடுகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளின் அழுத்தமாக, உயிரை பணயம் வைத்து நாட்டை மீட்ட இராணுவத்தினருக்கு எதிராக அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக மஹிந்த தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத் அசெரேனா ஹோட்டலில் பாகிஸ்தான் RSS நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தசமாதானத்திற்காக இலங்கையின் போர் மற்றும் அதன் பாடம்என்ற மாநாட்டில் உரையாற்றும் போதே மஹிந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தீவிரவாதிகளுக்கு புரியும் மொழியில் பதில் வழங்க வேண்டும். நல்ல தீவிரவாதி, கெட்ட தீவிரவாதி என பிரிக்க வேண்டாம். ஜனநாயகத்தின் பரம எதிரி, தீவிரவாதிகள் என்பதனை எந்த சந்தர்ப்பத்திலும் மறிந்து விட வேண்டாம்”... என மஹிந்த குறிப்பிட்டுள்ளர்.

விடுதலை புலிகளை தோல்வியடைய செய்து யுத்த வெற்றியை பெறுவதற்காக பாகிஸ்தான், சீனா மற்றும் இந்தியா ஆகிய பிரதான நாடுகளின் உதவியை முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் தான் மதிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


இந்த மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, டலஸ் அலகபெரும மற்றும் முன்னாள் அமைச்சர் ஜு.எல்.பீரிஸ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top