ஈத் முபாரக்
உலகளாவிய ரீதியிலுள்ள முஸ்லிம்கள், புனித நோன்புப் பெருநாளை
இன்று கொண்டாடி வருகின்றனர்.
கல்முனையில்...
கல்முனையில்...
கல்முனை அன்ஸாரிஸ் ஸூன்னதில் முஹம்மதிய்யா ஜூம்ஆ பள்ளிவாயல்,
கல்முனை ஹூதா ஜூம்ஆ பள்ளிவாயல் ஆகியன இணைந்து கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள
ஹூதா திடலில் வழமைபோன்று இடம்பெறும் புனித நோன்புப் பெருநாள் நபி வழித் தொழுகை, ஆயிரக்கணக்கான
மக்களின் பங்குபற்றுதலுடன் இன்று திங்கட் கிழமை (26) காலை 6.30 மணிக்கு இடம்பெற்றது.
ஆண், பெண் இருபாலாருக்கும் ஒரே ஜமாஅத்தாக இடம்பெற்ற இத்தொழுகையையும்,
குத்பா பிரசங்கத்தையும் மௌலவி ஏ.Bவி. பிர்னாஸ் (மன்பஈ) அவர்கள் நடாத்தி வைத்தார்கள்.
இம்முறை வழமையைவிட அதிகமாக கல்முனை, சாய்ந்தமருது மற்றும் கல்முனை
இஸ்லாமாபாத் பிரதேசங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நபிவழி பெருநாள் திடல் தொழுகையில்
கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
(எஸ்.அஷ்ரப்கான், ஏ.Bவி.எம்.அஷ்ஹர்)
நிந்தவூரில்
இன்றைய நோன்புப் பெருநாள் தொழுகை மிகவும் சிறப்பான முறையில் நிந்தவூர் அல்- அஷ்ரக் தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து மௌலவி "இத்ரிஸ் ஹசன், அவர்களினால் குத்பா உரையும் இடம்பெற்றது.
இப் பெருநாள் தொழுகையில் ஆண்கள், பொண்களென ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்.
கல்பிட்டியில்
இன்று கல்பிட்டி அனைத்து பள்ளிகள் ஒன்றியத்தால் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மைதானத்தில் சிறந்த முறையில் நடாத்தப்பட்ட நோன்பு பெருநாள் தொழுகையில் பெரும்திரளான மக்கள் கலந்து சிறப்பித்தனர்.இதில் கல்பிட்டி அப்துல் ஹாலிக் மெளலவி சிறப்பு பயான் நிகழ்த்தினார்.
சாய்ந்தமருதில்...
சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் ஜும்ஆப் பள்ளிவாசல் ஏற்பாடு செய்திருந்த நோன்பு
பெருநாள் தொழுகை சாய்ந்தமருது கடற்கரை
திறந்த மைதானத்தில் இடம்பெற்றது.
அஷ்ஷெய்க் கலீலுர்ரஹ்மான் (ஸல்பி) இமாமாக இருந்து
தொழுகையை நடாத்தினார்.
யாழ்ப்பாணத்தில்....
யாழ்-கிளிநொச்சி உலமா சபை மற்றும் அனைத்துப் பள்ளிவாசல் நிர்வாக சபையினரும்
இணைந்து ஏற்பாடு செய்த முஸ்லிம்
மக்களுக்கான நோன்பு பெருநாள் தொழுகை யாழ்ப்பாணம் ஜின்னா மைதானத்தில் இடம்பெற்றது.
மெளலவி அப்துல் அஸீஸ் (காஸிமி) இமாமாக இருந்து பெருநாள் தொழுகையை நடாத்தினார்.
இதேவேளை. தெளஹீத் ஜமாஅத்தினரின் நோன்பு பெருநாள் தொழுகை யாழ் மாநகர
மைதானத்தில் இடம்பெற்றது.
அஷ்ஷெய்க் பைஸல் ((மதனி). இமாமாக இருந்து பெருநாள் தொழுகையை நடாத்தினார்.
0 comments:
Post a Comment