பொலன்னறுவை, சுங்காவில் முஸ்லிம் ஹா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத் தொகுதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களால் நேற்று 22 ஆம் திகதி(2017.06.22) முற்பகல் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
ஆசிரிய நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பான புதிய கொள்கையை இவ்வாண்டில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இங்கு தெரிவித்தார்.
புதிய கொள்கைக்கமைய எந்தவொரு பாடசாலையிலும் ஆசிரியகள் மேலதிகமாக இருக்க முடியாதென்பதுடன், மேலதிகமாக இருக்கும் ஆசிரியர்கள் வெற்றிடம் நிலவும் பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற வேண்டுமென சுற்றறிக்கை வெளியிடப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நாட்டிலுள்ள பிள்ளைகளின் கல்வி சீராக வேண்டும் என்பதற்காக தீர்மானத்துக்கு வந்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி;, நாட்டிலுள்ள எந்தவொரு பிள்ளைக்கும் கல்விக்கான சலுகைகள் கிடைக்காமல் இருக்கக் கூடாதென்றும் சுட்டிக்காட்டினார்.
 நாட்டிலுள்ள அனைத்து இனத்தவர்களினதும் பிரச்சினைகளை தீர்த்தல், வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும் ஒரே வகையில் சேவையாற்றுதல் ஆகியவை ஜனாதிபதி என்ற வகையில் தனது பொறுப்பாகுமென்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
 மாணவர்களால் உற்சாகமாக வரவேற்கப்பட்ட ஜனாதிபதி நினைவுப் படிகத்தை திறந்து வைத்து, ஐந்து வகுப்பறைகளுடனான புதிய கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்து கண்காணிப்பு விஜயத்திலும் ஈடுபட்டார்.

 இந்த நிகழ்வில் வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்ன, மாகாண அமைச்சர் சம்பத் ஸ்ரீநிலந்த, பொலநறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.












0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top