சாய்ந்தமருது
வைத்தியசாலையை வேறு வைத்தியசாலையுடன் இணைப்பதில் உடன்பாடில்லை!
மத்திய அரசின்கீழ்
கொண்டுவருவதில் ஆட்சேபணையில்லை! என்று சாய்ந்தமருது பிரதேச
ஊர்ப்பிரமுகர்கள் மற்றும் இளைஞர்கள், உலமாக்கள்,
வைத்தியர்கள் பொதுநலன் விரும்பிகள் அதுதொடர்பான கருத்துக்களைப்
பரிமாறும் நிகழ்வு
சாய்ந்தமருது வைத்தியசாலையில் 2017-06-28 ஆம்
திகதி அவ்வைத்தியசாலையின்
வைத்திய அதிகாரி
வைத்திய கலாநிதி
ஜெஸீலுல் இலாகி
தலைமையில் இடம்பெற்றபோது
கருத்து வெளியிட்டனர்.
அதேவேளை
பல ஆண்டுகளாக
சாய்ந்தமருதில் இயங்கிய தெற்கு கிராமாட்சி சபையை
இழந்தது போன்று,
வைத்தியாசாலையையும் பிரிதொரு வைத்தியசாலையுடன்
இணைத்துவிட்டு அதனையும் இழக்க தாங்கள் ஒருபோதும்
இணங்கப்போவதில்லை. வீதியிலிறங்கி போராடவும்
தயார் என்று
சாய்ந்தமருது சூறா சபையும் தெரிவிக்கின்றது. இது தொடர்பான கருத்தாடல்களின் முழு
தொகுப்பு பின்வருமாறு,
பல
ஆண்டுகளாக சாய்ந்தமருதில்
இயங்கிய தெற்கு
கிராமாட்சி சபையை இழந்தது போன்று, வைத்தியாசாலையையும்
பிறிதொரு வைத்தியசாலையுடன்
இணைத்துவிட்டு அதனையும் இழக்க தாங்கள் ஒருபோதும்
இணங்கப்போவதில்லை என்று, ஷுறா சபையின் செயலாளர்
எம்.ஐ.எம்.சதாத்
அழுத்தமாகத் தெரிவித்தார்.
கல்முனை
அஷ்ரப் ஞாபகார்த்த
வைத்தியசாலையுடன் சாய்ந்தமருது வைத்தியசாலையை
இணைத்து, அபிவிருத்தி
செய்யப்போவதாகவும் அதற்கான முஸ்தீபுகள்
இடம்பெறுவதாகவும், குறித்த செயற்பாடுகள்
சாய்ந்தமருதின் தனித்துவத்தைப் பாதிக்கும் என்பதாலும் அந்த
செயற்பாட்டுக்கு எதிரான தங்களது கருத்துக்களை பத்திரிகையாளர்களுக்கு
தெளிவுபடுத்தும், பத்திரிகையாளர் சந்திப்பு சாய்ந்தமருது பலநோக்கு
கூட்டறவுச் சங்க கட்டிடத்தில்
2017-06-28 ஆம் திகதி ஷுறா சபையின் தலைவர்
வைத்தியர் எம்.ஐ.எம்.ஜெமீல் தலைமையில்
இடம்பெற்றது.
பிரதேச
ஊடகவியலாளர்கள் மற்றும் ஷுறா சபையின் உயர்சபை
உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்த இந்நிகழ்வில் கருத்து வெளியிடும் போதே
எம்.ஐ.எம்.சதாத்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நீண்டகாலமாக
சாய்ந்தமருது மக்கள் தங்களை தாங்களே ஆள்வதற்கான
உள்ளுராட்சி சபையைக் கோரி நிற்கின்ற இந்த சந்தர்ப்பத்தில்
அதற்காக உள்ள
வளங்களில் ஒன்றாக
சாய்ந்தமருது வைத்தியசாலையும் குறிப்பிடப்பட்டுள்ள
இந்த சந்தர்ப்பத்தில்,
இந்த வைத்தியசாலையை
பிரிதொரு வைத்தியசாலையுடன்
இணைக்க எடுக்கப்படும்
முயற்சி சந்தேகத்தை
ஏற்படுத்துவதாகவும், சாய்ந்தமருதின் அடையாளங்களை
அழிக்க எடுக்கும்
முயற்சியாக ஷுறா சபை கருதுவதாகவும் தெரிவித்தார்.
சாய்ந்தமருது
வைத்தியசாலையை அபிவிருத்திசெய்ய விரும்புபவர்கள்
கிழக்குமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் சுபைரினால்
முன்மொழியப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள தளவைத்தியசாலை என்ற
அந்தஸ்த்தை சாய்ந்தமருது வைத்தியசாலைக்கு
பெற்றுக் கொடுப்பதனூடாக
சாய்ந்தமருது மக்களுக்கு உதவ முடியும் என்றும்
கேட்டுக்கொண்டார்.
தங்களது
கருத்துக்களை மீறி சாய்ந்தமருது மக்களின் அபிலாசைகளுக்கு
எதிராக எடுக்கப்படும்
எந்தத் தீர்மானத்தையும்
தாங்கள் ஏற்கப்போவதில்லை.
என்றும் அதற்கு
எதிராக வீதியில்
இறங்கிபோராடவும் தயாராகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
வைத்தியசாலை
விடயம்போன்று சாய்ந்தமருதின் ஏனைய விடயங்களிலும் ஷுறா
சபை மிகுந்த
கரிசனை செலுத்தி
வருவதாகவும் வட்டார எல்லைப் பிரிப்பில் கூட
இந்த ஊரின்
பெயர் குறிப்பிடப்படாது
புறக்கனிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சாய்ந்தமருது
மக்கள், அபிவிருத்தி
விடயங்களை பிற்படுத்தி
கட்சிகளின் முன்னேற்றத்துக்கு முதன்மையளிப்பாகாகவும்
கவலையுடன் இங்கு
கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.
நிகழ்வின்போது
சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரியபள்ளிவாசலின் பேஷ் இமாம் அஷ்செய்க் எம்.ஐ.ஆதம்பாவா,
சாய்ந்தமருது உலமாசபையின் தலைவர் அஷ்செய்க் எம்.எஸ்.சலீம்
(ஷர்கி), ஷுறா
சபையின் உபதலைவர்
எம்.ஐ.ஜப்பார் மற்றும்
ஷுறா சபையின்
சார்பில் எஸ்.எம்.கலீல்
உள்ளிட்ட பிரமுகர்களும்
கலந்துகொண்டு கருத்துக்களை வெளியிட்டனர்.
இதேவேளை
சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும்
பள்ளிவாசல் சமூகம் என்பன சுகாதார பிரதி
அமைச்சர் பைசால்
காசிமுக்கு வைத்தியசாலையின் அபிவிருத்தி
தொடர்பில் மேற்கொண்ட
அழுத்தத்தின் காரணமாக பிரதி அமைச்சர் எடுத்துக்கொண்ட
முயற்சியின் கீழ் சாய்ந்தமருது வைத்தியசாலையை கல்முனை
அஷ்ரப் ஞாபகார்த்த
வைத்தியசாலையுடன் இணைத்து அபிவிருத்தி செய்வது தொடர்பில்
பைசால் காசிம்
முன்வைத்த வேலைத்திட்டத்துக்கு
சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும்
பள்ளிவாசல் சமூகம் என்பன அங்கீகாரம் வழங்கியிருந்த
நிலையில் அதற்கான
செயற்பாடுகள் நிறைவடைந்து இவ்வைத்தியசாலையை
அஷ்ரப் ஞாபகார்த்த
வைத்தியசாலையுடன் இணைத்து இங்கு இப்பிராந்தியத்தில் இல்லாத முறிவு வைத்தியம் உள்ளிட்ட
சில விசேட
வைத்திய பிரிவுகளை
ஏற்படுத்துவதற்கான முன்னெடுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்
இவ்வேளையில் குறித்த இணைப்பு தொடர்பில் கருத்து
வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதால் அதுதொடர்பான
கருத்துக்களைப் பரிமாறும் நிகழ்வு சாய்ந்தமருது வைத்தியசாலையில்
2017-06-28 ஆம் திகதி அவ்வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி
வைத்திய கலாநிதி
ஜெஸீலுல் இலாகி
தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு
சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரியபள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபா,
ஷுறா சபையின்
தலைவர் வைத்தியர்
எம்.ஐ.எம்.ஜெமீல்
உள்ளிட்டவர்களுடன் பிரதேச வைத்தியர்கள்
பொறியியலாளர்கள் பிரமுகர்கள் இளைஞர்கள் என பலரும்
கலந்துகொண்டிருந்தனர்.
வைத்திய
அதிகாரி வைத்திய
கலாநிதி ஜெஸீலுல்
இலாகி, தனதுரையில்
குறித்த விடயம்
தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட
விடயங்கள் தொடர்பாகவும்
விசேட வைத்தியப்பிரிவுகள்
இங்குவருவதில் உள்ள நன்மைகள் முறிவு வைத்தியப்பிரிவு
இப்பிராந்தியத்தில் இல்லாததால் மட்டக்களப்பு
மற்றும் அம்பாறைக்கு
நோயாளிகள் மாற்றப்படுவது
சம்மந்தான தகவல்கள்
அதனால் மக்கள்
எதிர்நோக்கும் கஷ்ட்டங்கள் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தார்.
சாய்ந்தமருது
வைத்தியசாலையை மத்திய அரசுடன் இணைப்பது, விஷேட
வைத்திய பிரிவுகளை
கொண்டுவருவது மற்றும் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன்
இணைப்பது தொடர்பிலான
கருத்தாடலில் வைத்தியசாலையை பிறிதொருவைத்தியசாலையுடன்
இணைப்பதைத் தவிர மற்றைய விடயங்களில் தாங்கள்
எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்றும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இங்கு
வைத்தியர்கள் ஊர்ப்பிரமுகர்கள் மற்றும் இளைஞர்களால்
பல்வேறு கருத்துக்கள்
முன்வைக்கப்பட்ட அதேவேளை இடம்பெறவுள்ள கலந்துரையாடல்களில் மேற்படி கருத்துக்களை முன்வைக்குமாறு சபையோரால்
முன்மொழியப்பட்டது.
(எஸ்.அஷ்ரப்கான்,எம்.வை.அமீர்)
0 comments:
Post a Comment