டெங்கு நோயாளிகளின் சிகிச்சை முகாமைத்துவத்திற்காக பிலியந்தல, வேதர, தலங்கம, மினுவங்கொட, தங்கொட்டுவ உள்ளிட்ட சில வைத்தியசாலைகள் தற்காலிகமாக சுகாதார அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
 இதேவேளை, டெங்கு நோய் பரவி வருவதனால் வைத்தியசாலை இரசாயன சேவையை 24 மணித்தியாலமும் முன்னெடுப்பதில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
 அமைச்சின் செயலாளர் ஜனக்க சுகததாஸ தலைமையில் இன்று காலை நடைபெற்ற டெங்கு முகாமைத்துவ குழுக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இரசாயன கூடங்களின் சேவையை 24 மணித்தியாலமும் நடத்துயுவதற்கு தேவையான இரசாயனகூட இயந்திரம், இரசாயனகூட சேவை ஆகியவை வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த வைத்தியசாலைக்கு தேவையான வைத்தியர்கள் மற்றும் ஏனைய பணியாளர்களும் அமைச்சினால் கடமையில் ஈடுபடுத்ப்பட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top