திண்மக்
கழிவு முகாமைத்துவம் தொடர்பான தேசிய செயல்திட்டம் வகுக்கப்படவுள்ளது.
இத்திட்டத்தை
வரைவதற்கான மாநாடு இன்று காலை
கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. இந்த செயலமர்வு இரண்டு
தினங்களாக இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது.
விஞ்ஞான
தொழில்நுட்பவியல் அமைச்சு, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற
அமைச்சு மற்றும் மத்திய சுற்றாடல்
அதிகார சபை ஆகியன இணைந்து
இதனை ஒழுங்கு செய்துள்ளன.
இந்த
நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து
கொண்ட உரையாற்றிய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கருத்து
வெளியிடும் போது,
திண்ம
கழிவு முகாமைத்துவம் தொடர்பில் விஞ்ஞான ரீதியான வேலைத்திட்டம்
ஒன்றின் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.
திண்ம கழிவகற்றல் செயற்பாடுகளை உள்ளுராட்சி மன்றங்கள் ஏற்று நடத்துவதால் அந்த
நிறுவனங்களுக்கும் பயன் தரக்கூடிய வகையில்
விஞ்ஞான ரீதியான வேலைத்திட்டம் ஒன்று
அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த
விடயம் தொடர்பில் அனுபமுள்ள புத்தஜீவிகளும் விஞ்ஞானிகளும் இலங்கையில் உள்ளனர். எனவே உள்ளுர் விஞ்ஞானிகளின்
பங்களிப்புடன் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்து
செல்ல வேண்டும் என்று அமைச்சர் இங்கு
வலியுறுத்தினார். அனைத்து வகை கழிவகற்றல்
தொடர்பில் தேசிய கொள்கையொன்றை வகுப்பது
குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்று
குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment