அமெரிக்காவில்
உள்ள மருத்துவமனையில்
மர்ம நபர்
ஒருவர் சரமாரி
துப்பாச்சூடு நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின்
New York-ல் இன்று உள்ளூர் நேரப்படி 2.45 மணி
அளவில் Bronx-Lebanon மருத்துவமனையில் மர்ம
ஒருவர் அங்கிருந்த
பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு
நடத்தியுள்ளான்.
இதில்
மூன்று மருத்துவர்கள்
உட்பட பலர்
காயமடைந்திருப்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் பின் மருத்துவமனையில் உள்ள 16-வது மாடியில் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் மருத்துவர்கள் மீது திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளான்.
இதில் மருத்துவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவிக்கையில், Bronx-Lebanon மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அம்மருத்துவனையின் முன்னாள் மருத்துவர் என்றும் அவரது பெயர் Henry Bello(35) என்றும் தெரிவித்துள்ளது.
இவர் மருத்துவமனையில் மருத்துவர் வேடமிட்டு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார் என்றும், அவர் கருப்பு மற்றும் புளூ நிற உடை அணிந்ந்து, வெளிப்புறத்தில் வெள்ளை நிற கோட் அணிந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
Bronx-Lebanon மருத்துவமனை 120-ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் 1000-க்கும் மேற்பட்ட படுக்கை வசதி கொண்ட நோயாளி அறைகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment