பாரீஸ் நகரத்தில் கார் மூலம் மோதி பள்ளிவாசலைத் தகர்க்க முயற்சி
செய்த கார் சாரதியை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரான்ஸ் தலைநகர், பாரீஸில் சமீபத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடத்தினார்கள். அதை தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாரீஸின் புறநகரில் கிரீடியல் நகரம் உள்ளது.
நேற்று இரவு அங்கு அதிவேகமாக ஒரு கார் வந்தது. வந்த வேகத்தில் அங்கிருந்த ஒரு பள்ளிவாசலின் தூண்கள் மற்றும் தடுப்புகளில் மோதி நின்றது.
அதில் பள்ளிவாசலுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் விரைந்து சென்று காரை ஓட்டி வந்த சாரதியை கைது செய்தனர்.
43 வயதான அந்த நபர் ஆர்மினியாவை சேர்ந்தவர்.உடனடியாக அவரது வீட்டுக்கு சென்று பொலிஸார் சோதனையிட்டனர். அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது.
இது ஒரு தீவிரவாத தாக்குதல் முயற்சி என பாரீஸ் பெரிய பள்ளிவாசலின் இமாம் தலில் பொயுபாக்கர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் உள்துறை மந்திரி ஜெராட் கோலோம்ப் கூறும்போது, இத்தாக்குதலின் குறிக்கோள் குறித்து விசாரணை நடை பெற்று வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 19 ஆம் திகதி வடக்கு லண்டனில் பள்ளிவாசல் மீது வேனை ஏற்றி நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.