கொழும்பு நகரில் குறைபாடுகளுடைய வீடுகளில் வாழும் குடும்பங்களுக்கு நவீன வசதிகளுடனான வீடுகளை வழங்கும் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டலக்கிரு செவனமாடி வீட்டுத் திட்டத்தின் முதலாவது கட்டம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களால் நேற்று (28) பிற்பகல் மக்களுக்கு உரித்தாக்கப்பட்டது.
பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் நெறிப்படுத்தலில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நகர புத்தெழுச்சி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 192 வீட்டு அலகுகளை கொண்ட இந்த வீடமைப்பு தொகுதிக்காக ரூபா 6,720 இலட்சம் செலவிடப்பட்டுள்ளது.
லக்விரு செவனதிட்டம் 768 வீடுகளைக் கொண்டதாகும். அதற்கமைய மேலும் 192 வீட்டு அலகுகளைக் கொண்ட மூன்று கட்டிட தொகுதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இலங்கை புகையிரத திணைக்கள ஊழியர் விடுதிக்கும், சுற்றியுள்ள குடும்பங்களுக்கும் அந்த வீடுகள் வழங்கப்படவுள்ளன.
நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து புதிய வீடமைப்பு திட்டத்தை மக்களுக்கு உரித்தாக்கிய ஜனாதிபதி அவர்கள் இரண்டு வீடுகளையும் பார்வையிட்டார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான பாட்டலீ சம்பிக்க ரணவக்க, நிமல் சிறிபால டி சில்வா, சரத் பொன்சேகா, ராஜாங்க அமைச்சர் .எச்.எம்.பௌஸி, பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்ன, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹூமான் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top