சைட்டம் நிறுவனம் தொடர்பான வர்த்தமானி தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அறிக்கை
சைட்டம் நிறுவனம் சம்பந்தமாக அரசாங்கம் விதித்துள்ள நிபந்தனைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை முழுமைப்படுத்தும் வரை சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியின் மாணவர் சேர்க்கை மற்றும் பட்டமளிப்பு என்பன நிறுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் அவரது செயலாளர் பீ.பி.அபயகோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைட்டம் நிறுவனத்தின் பாடநெறியை இலங்கை மருத்துவச் சபை அங்கீகரிக்கும் முறைக்கு அமைய உருவாக்குதல், நிறுவனம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்தல், அதற்காக சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளுதல், மருத்துவக் கல்வியில் குறைந்தபட்ச தரங்களை வர்த்தமானியில் வெளியிடுதல் ஆகியவற்றை செயற்படுத்த உள்ளதாகவும் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.