முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ்
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர்களின் இப்தார் நிகழ்வுகளை புறக்கணித்துள்ளதாக
ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.
இதேவேளை, அலரி மாளிகையில் பிரதமரின் இப்தார் நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஐக்கிய தேசியக்
கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்குப் பக்கத்தில்
உள்ள ஆசனத்தில் அமர்ந்து அவருடனான நெருக்கத்தையும் முஹப்பத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.
ஜனாதிபதியின் இப்தார் நிகழ்விலும் முஸ்லிம் காங்கிரஸ்
தலைவர் கலந்து கொண்டிருந்தார்.
கட்சியின் தலைவர் பிரதமருடன் நெருக்கமாகிப் போய்க் கொண்டிருக்கிறார்.
பிரதித் தலைவர் பிரதமரின் நிகழ்வைப் புறக்கணிக்கின்றார் என்பது இவர்களின் இச்செயல்பாடுகளின்
மூலம் தெரியவருகின்றது.
அப்படியானால், மக்களிடயே
ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என மேடைக்கு மேடை பேசிய முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் மக்கள் பிரதிநிதிகளிடயே
ஒற்றுமையான கருத்துக்கள் இல்லையா? கட்சிக்குள் பிளவுகள் உள்ளதா? ஒருவர் கிள்ளிவிட மற்றொருவர்
தாலாட்டுவது போல் இவர்களின் செயல்பாடுகள் தென்படுகின்றதல்லவா? என விடயம் தெரிந்தவர்கள்
கருத்துக்களைக் கூறி கேள்வி எழுப்புகின்றனர்.
கட்சிக்குள் ஒருமித்த கருத்தும் போக்கும் இல்லாதது போன்று தலைவரின்
செயல்பாடுகளுக்கு மாற்றமாக சிலர் செயல்படுவது கட்சிக்குள் ஒற்றுமை இல்லை என்பதை வெளிச்சம்
போட்டுக் காட்டுகின்றது எனவும் சுட்டிக்கட்டப்படுகின்றது.
0 comments:
Post a Comment