அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன் இருக்கும் போது உல்லாசமாக வாழ்ந்து அனுபவித்த பரிதாபத்திற்குரிய சகோதரர் வை எல் எஸ் ஹமீட் அவர்களுக்கு இன்று இருப்புக் கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளதையே அவரின் கற்பனையான எழுத்துக்கள் சுட்டிக்காட்டுகின்றது.
சகோதரர் வை எல் எஸ் ஹமீட் தனது எழுத்தில் அரசியல் பற்றி பேசுகின்றார், மார்க்கம்பற்றி பேசுகின்றார். ஏன் நீதி, நியாயம் என்றெல்லாம் தற்போது பேசத் தொடங்கியுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தல் நடந்து தேசியப்பட்டியல் நியமனம் வழங்கும் வரை சகோதரர் வை எல் எஸ் ஹமீட் அவர்களுக்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் சரியாகவே இருந்தது.
தேசியப்பட்டியல் நியமனத்திற்குப் பிறகு அமைச்சரின் செயல்பாடுகளை வித்தியாசமாகப் சகோதரர் வை எல் எஸ் ஹமீட் பார்ப்பதை மனிதனாகப் படைக்கப்பட்ட ஆறு அறிவுடைய சகலருக்கும் புரியாமல் இருக்க முடியாது.
மர்ஹும் அஷ்ரப் காலத்தில் அன்னாருக்கு செயலாளராக இருந்து செயல்பட்ட போது இந்த  சகோதரர் வை எல் எஸ் ஹமீட் அவர்கள் ஒரு வித்தியாசமான மனிதராகத்தான் செயல்பட்டார் என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்த விடயம்.
இவர் சாய்ந்தமருதை சேர்ந்த ஒருவரை மனைவியாகக் கொண்டிருந்த போதும் பொதுவாகச் சிந்திக்காமல் சாய்ந்தமருது மக்களுக்கு விரோதமாக சாய்ந்தமருதின் எல்லையை மாற்றி அமைப்பதற்கு பாடுபட்டு துரோகம் செய்ததை சாய்ந்தமருது மக்கள் எளிதில் மறந்துவிடப்போவதில்லை.
இப்படிப்பட்டவர் தேசியப்பட்டியலில் எம்.பியாக நியமனம் செய்யப்பட்டிருப்பின் என்ன நடந்திருக்கும் என்பதை சாய்ந்தமருது மக்கள் சிந்தித்துப் பார்க்கிறார்கள். உண்மையில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட நல்ல ஒரு முடிவுதான் தேசியப் பட்டியல் இவருக்கு வழங்கப்படாமையாகும் என அச்சந்தர்ப்பத்தில் மக்கள் பேசிக்கொண்டதை மறக்கமுடியாது.
பதவிகள் இருக்கும்போது ஒரு நிலை பதவிகள் இல்லாத போது வேறு ஒரு நிலை என்ற நிலையில் வாழ்ந்து செயலாற்றும் ஒரு வித்தியாசமான மனிதராகத்தான். சகோதரர் வை எல் எஸ் ஹமீட் அவர்கள் செயல்பட்டவர்.
சகோதரர் வை எல் எஸ் ஹமீட் அவர்கள் கூறுவது போல்    அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களுக்கு ஆதரவாக முகநூலில் எழுதுபவர்கள் அனைவரும் ஊடகவியலாளர்கள் என நினைப்பது எவ்வளவு கீழ்த்தரமான நினைப்பாகும்.
இன்று இளைஞர்கள் அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை ஒப்பிட்டு பார்க்கிறார்கள். இவர்களில் மக்களுக்காக கடுமையாகப் பாடுபடுபவர் யார்? வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்கு வெளிநாட்டில் தனவந்தர்களைத் தேடுவதும் அதற்கு உதவுவதும் யார்? முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும்போது அந்த இடத்திற்கு நேரடியாக விரைந்து செல்பவர் யார்? ரமழான் மாதங்களில் ஏழைகளுக்கு உதவுவது யார்? தொழுகைக்கான பள்ளிகளுக்கு உதவுவது யார்? பாராளுமன்றத்தில் அச்சமில்லாமல் விடயத்தை நேரடியாக எடுத்து வைத்து பேசுபவர் யார்? எனபதை எமது இளைஞர்கள் காண்கிறார்கள். இப்படியாக உதவும் மனிதனாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களை இளைஞர்கள் காண்கிறார்கள். அவருக்கு ஆதரவாக அதிகம் அதிகம் எழுதுகிறார்கள்.
சகோதரர் வை எல் எஸ் ஹமீட் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் தற்போது தெரிவித்துக் கொண்டிருப்பது தங்களின் நெடு நாளைய ஆசை ஒன்று நிறைவேறாத நிலையில் சுயநலத்தின் வெளிப்பாடாகத்தான் தங்களின் முகநூலில் பதிவுகளை இடுவதும் மின்னல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதும் என்பது மக்களுக்கு நன்கு புரியும்.
சக்தியில் ஒளிபரப்பாகும் மின்னல் நிகழ்ச்சியில் மக்கள் செல்வாக்கில்லாத உங்களைப் போன்றவர்களை அழைத்து அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களுக்கு எதிராக வசைபாட வைக்கிறார் என்பது மக்களுக்கு புரியாமலில்லை. நீங்கள் அந்த நிகழ்ச்சிக்கு வருகிறீர்கள் என்றாலே மக்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதில்லை என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இறுதியாக, மக்கள் செல்வாக்குள்ள மர்ஹும் அஷ்ரப் அவர்களோடு இருந்து மக்களின் நல்ல அபிப்பிராயத்தைப் பெறாத நீங்கள் தற்போது மக்களோடு மக்களாக இருந்து செயல்படும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களோடு உங்களால் ஒரு போதும் மானிடத் தன்மையுடன் செயலாற்ற முடியாது என்பதுதான் உண்மை. அதுதான் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கட்சியிலிருந்து எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களைப் பிரித்துள்ளான் என நம்புகின்றோம்.
விடயம் உள்ளவன் அதிகம் பேசமாட்டான் ஆனால், நீங்கள் அதிகம் அதிமாகப் பேசுகின்றீர்கள். மக்கள் உங்களைப்பற்றிப் புரிந்து விட்டார்கள். ஆனால், நீங்கள்தான் உங்களைப் புரிந்து கொள்ளவில்லை.
அஸாம் அப்துல் அஸீஸ்

சாய்ந்தமருது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top