சுகாதார பிரதி அமைச்சர் பைஸல் காசீம் அவர்களால் ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்திற்கு அனுப்பப்பட்டதாக தெரிவித்து பதிவேற்றப்பட்டுள்ள சாய்ந்தமருது வைத்தியசாலை தொடர்பான செய்தி அறிக்கை பல சந்தேகங்களை படித்த மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
உண்மையில் சுகாதார பிரதி அமைச்சர் பைஸல் காசீம் அவர்களால்தான் இந்த செய்தி அறிக்கை அனுப்பப்பட்டிருப்பின் சுகாதார பிரதி அமைச்சர் பைஸல் காசீம் அவர்களின் செயலாளர் தமிழை எங்கு படித்தார்? அவருக்கு தமிழ் மொழி அறிவை போதித்த ஆசிரியர் யாராக இருக்கும் என்ற கேள்வியை எழுப்ப வேண்டியிருப்பதாக படித்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
இச் செய்தி அறிக்கை சுகாதார பிரதி அமைச்சர் பைஸல் காசீம் அவர்களின் நிர்வாகத்திலுள்ள பலவீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவது மாத்திரமல்லாமல் இந்த செய்தி அறிக்கை மூலம் சாய்ந்தமருது மக்களை
மராய்க்கார்சபை,
மூன்று முறை வாக்களித்த சாய்ந்தமருது மக்கின்,
போது மக்குக்கு
என்று அநாகரிகமான சொற்றொடர்களாக மாற்றப்பட்டுள்ளது. இது ஏன் என்ற கேள்வியை சாய்ந்தமருது மக்கள் பிரதி அமைச்சர் பைஸல் காசீம் அவர்களிடம் எழுப்பியுள்ளனர். இது குறித்து ஆத்திரமடைந்த நிலையில் இம்மக்கள் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதோ ஜப்னா முஸ்லிம் செய்தி
சாய்ந்தமருது வைத்தியசாலை, அஷ்ரப் வைத்தியசாலையுடன் இணைக்கப்படாது - பைசால் காசீம்
மக்கள் பயன்பாடு குன்றிப்போய் இருக்கின்ற சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையினை தருமுயர்த்தி,இப்பிரதேச மக்களுக்கு பயனுள்ள வகையில் மாற்றியமைத்துதாருங்கள் என வைத்தியசாலை அபிவிருத்திக்க்குழு,பள்ளிவாயல் மராய்க்கார்சபை போன்ற அமைப்புக்கல் என்னை நேரில் வந்து பலதடவை சந்தித்து வேண்டிக்கொண்டதற்கு இணங்க கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைந்ததான ஒரு என்பு முறிவு சிறப்பு விடுத்திதொகுதியையும்,அதற்கான கதிர்ப்படப்பிடிப்பு,சத்திரசிகிச்சை நிலையமுட்பட ஏனைய உட்கட்டமைப்புக்களையும் நிவாதர்கான நடவடிக்ககைகளை நான் மேற்கொண்டேன்.
இதன் ஆரம்ப கட்டமாக அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை நிருவாகத்துடன் பேசி அவர்களது சம்மதத்தினை பெற்றதன் பின்னர் சுகாதார அமைச்சின் செயாளர்,பணிப்பாளர் நாயகம் ஆகியோரது சம்மதத்தினையும்பெற்று மாகான சுகாதார பணிப்பாளருக்கு உரிய அறிவுறுத்தல்களை வலண்குவதற்குரிய அனைத்து நடவடிக்கக்ளினையும் மேற்கொண்டிருந்தேன்.இதற்கிடையில் சாய்ந்தமருது மக்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக முகநூல் மூலமாக அறியக்கிடைத்தது,குறிப்பாக சாய்ந்தமருது சூரா கவுன்சில் போன்ற அமைப்புக்கல் இதனை எதிர்ப்பதாக அறிந்தேன்.
எனக்கு மூன்று முறை வாக்களித்த சாய்ந்தமருது மக்கின் விருப்பத்திற்கு எதிராகைந்த வைத்தியசாலை இணைப்பினை மேற்கொள்வதில்லை என தீர்மானித்து கிழக்குமாகான சுகாதார செயலாளருக்கு அனுப்புவதற்கான கடிதத்தினையும் நிறுத்திவிட்டேன்.
இதன்பிறகு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் சாய்ந்தமருது வைத்தியசாலையினை இணைப்பது சம்பந்தமாக வெளியிடப்படுகின்ற எந்த செய்திகளுக்கும் நான் போருப்புதாரியல்ல என்பதை எனது ஆத்ரவாளர்கலான போதுமக்குக்கு தெரிவித்துக்கொகின்றேன்.
Jaffna Muslim நேரம் Tuesday, June 27, 2017
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment