சந்தையில் அரிசித் தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என்று கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அரிசியின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என்றும் கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் அறுவடைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதற்குத் தீர்வுகாணும் வகையில் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்தது.
அரிசிக்காக அறவிடப்படும் இறக்குமதி வரியை நீக்கி, தனியார் துறைக்கும் அரிசியை இறக்குமதி செய்ய இடமளிக்கப்பட்டதுநெல் சந்தைப்படுத்தல் சபையின் கையிருப்பில் 50 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி காணப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதற்கு மேலதிகமாக ஒரு தொகை அரிசியை பாதுகாப்புத் தொகையாக பேணவும் அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது.
சந்தையில் அரிசித் தட்டுப்பாடு ஏற்பட்டால் அல்லது தனியார் துறையினர் அரிசியின் விலையை அதிகரித்தால் பாதுகாப்புத் தொகையாக பேணப்படும் அரிசி சந்தைக்கு விடப்படும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தேங்காயின் விலை அதிகரித்துள்ளமை பற்றி வாழ்க்கைச் செலவிற்கு கவனம் செலுத்தியிருக்கின்றது. மேலும் , பிளாஸ்ரிக் அரிசி தொடர்பாக போலிப் பிரசாரங்களை முன்னெடுத்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் இதன்போது கூறினார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top