நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என்று பா.ஜ.க வின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
ரஜினி கடந்த மாதம் தனது ரசிகர்களைச் சந்திக்க தொடங்கியது முதலே அவரது அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்து வந்தனர்.
இந்நிலையில், இன்று சுப்பிரமணிய சுவாமி தனியார்தொலைக்கட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த சுவாமி, "ரஜினிகாந்த் அரசியலிக்கு வராமல் இருப்பதே அவருக்கு நல்லது. வந்தால் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும்" என்று கருத்து தெரிவித்தார்.
மேலும், ரஜினிகாந்த் பற்றி கூறும்போது, " நடிகர் ரஜினிகாந்த் படிப்பறிவு அற்றவர். அவருக்கு அரசியலுக்கு வரத் தகுதி இல்லை. அவர் மீது நிதி மோசடி குற்றச்சாட்டுகள் உள்ளன" என்று கூறினார்.
இந்தக் கருத்து ரஜினி ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி அரசியலுக்கு வந்தால் தங்கள் கட்சிக்கு வர வேண்டும் என்று பா.ஜ.க தலைவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment