சமூக இணையத்தளமான பேஸ்புக்கை பயன்படுத்தி இலங்கையர்களின் பணத்தை மோசடியாக பெற்றுக் கொண்ட 25 வெளிநாட்டவர்கள் இரகசியப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 50 மில்லியன் ரூபாவாவை இவர்கள் மோசடி செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் மகாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தகவல் தருகையில், இந்த சம்பவங்கள் தொடர்பாக 15 முறைப்பாடுகள் இரகசிய பொலிசாருக்கு கிடைத்திருந்தன. இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது நாட்டில் சுற்றுலா மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காக வருகை தரும் வெளிநாட்டவர்கள் சமூக இணையத்தளமான பேஸ்புக்குடன் தொடர்புபட்டு நண்பர்களை ஏற்படுத்தியுள்ளனர். பின்னர், அவர்களுக்கு பல்வேறு பரிசில்களை அனுப்புவதாக அதில் தெரிவித்து தகவல்களைப் பரிமாறியுள்ளனர். இந்தப் பரிசில்களைப் பெற்றுக் கொள்வதற்காக தபால், சுங்கம், காப்புறுதி ஆகிய கட்டணங்களைச் செலுத்துவதற்காக பணம் தேவை என்று தெரிவித்து பணத்தைப் பெற்றுக் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top