கடந்த 29 ஆண்டுகளாக, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள பெட்டலுமாவில், 'உலகின் அசிங்கமான நாய்' என்ற போட்டி நடந்து வருகிறது.
இந்த வருடம் நடந்த போட்டியில் 13 நாய்களைத் தோற்கடித்து பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது 3 வயது மாஸ்டினோ இனத்தை சேர்ந்த மார்த்தா என்கிற நாய். சிவப்பு நிற கண்கள், அதிக சதை, கறுப்பு நிறம் எனப் பார்வையாளர்களை அதிகம் கவர்ந்தது மார்த்தாதான். மார்த்தா பற்றி அதன் உரிமையாளர் ஜின்ட்லர் கூறுகையில், "இதை நாய்கள் பாதுகாப்பு மையத்திலிருந்து தத்தெடுத்தோம், அப்போது, மார்த்தாவுக்கு பார்க்கும் திறனில்லை. பல அறுவைசிகிச்சைகளுக்குப் பிறகே அதனால் பார்க்க முடிகிறது" என்றார்.
சாம்பியன் பட்டம் வென்ற மார்த்தாவுக்கு, வெற்றிக்கான கோப்பையும் 1,500 அமெரிக்க டாலரும் பரிசாக வழங்கப்பட்டது. அகோர கண்கள் கொண்ட நாய், வித்தியாசமான பற்களைக் கொண்ட நாய் என, போட்டியில் பல நாய்கள் பங்கேற்றன. பொதுவாக, உலகின் அழகான விஷயங்களுக்காக போட்டி நடைபெறுவது வழக்கம். ஆனால், இவர்கள் உலகின் அசிங்கமான நாய்களுக்கு பட்டம் வழங்கிச் சிறப்பிக்கிறார்கள். இந்தப் போட்டி, நாய்களைத் தத்தெடுப்பதற்கான விழிப்பு உணர்வுக்காக நடத்தப்படுகிறது.
0 comments:
Post a Comment