பிரதி
அமைச்சர் பைசால்
காசீம் சாய்ந்தமருது
தொடர்பாக வெளியிட்டுள்ள
ஊடக அறிக்கையை
வாசித்த போது
மிகச் சிறு
வயதான பிள்ளைகள்
எழுதிப் பழகியது
போன்ற உணர்வு
ஏற்பட்டது.
பிரதி
அமைச்சர் பைசால்
காசீம். தன்னோடு
நன்கு படித்த
ஒருவரை வைத்து
கொண்டு அறிக்கை
எழுதக் கூட
பிரதி அமைச்சருக்கு
தெரியாதா?
குறித்த
அறிக்கையில் சாய்ந்தமருது மக்களை மக்குகள் என்றும் சாய்ந்தமருதிலுள்ள
மரைக்காயர் சபையினரை மராய்க்கார்சபை என்று கூட கூறியுள்ளார்.
இதனை அவர்
அறிந்து கூறினாரோ
இல்லை தனது
மனதிற்குள் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளாரோ தெரியவில்லை.
இப்படியானவர்
பாராளுமன்றம் சென்று எதனைச் சாதிக்கப் போகின்றார் இவரை
பாராளுமன்ற அனுப்பி வைத்த மக்கள் பரிதாபத்திற்குரியவர்கள். இவரை பாராளுமன்ற
அனுப்பி வைத்த
மக்கள் வெட்கப்பட
வேண்டிய தருணம்
இது.
அமைச்சர்
ஹக்கீமுக்கு இவ்வாறானவர்களை தன்னுடன் வைத்திருக்க அதிக
விருப்பம். அவர்கள் தானே அவரின் சொல்லுக்கு
கட்டுப்படுவார்கள். அமைச்சர் ஹக்கீமின்
அரசியல் விளையாட்டில்
மக்கள் தான்
பாதிக்கப்படுகிறார்கள் என்பதுவே கவலையான
விடயமாகும்.
திகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றம் சென்றுள்ள முஸ்லிம் காங்கிரஸ் சார்பான எம்.பியின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பதை வாக்களித்த மக்கள் அறிந்து கொள்வதற்காக நாடாளுமன்றில் உள்ள எம்.பிக்களில் சிறப்பாக செயற்பட்டுள்ளவர்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயம், பெருந்தோட்டத் துறை, கால்நடை மற்றும் மீன்பிடி, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல், நல்லிணக்கம் மற்றும் மீள்குடியேற்றம், வர்த்தகம் மற்றும் தொழில் துறை, நலனோம்புகை மற்றும் சமூக சேவை, நீதி, பாதுகாப்பு மற்றும் சட்டம், தேசிய பாரம்பரியம், ஊடகம் மற்றும் விளையாட்டு, பொருளாதாரம் மற்றும் நிதி, கல்வி, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு, தொழிநுட்பம், தொடர்பாடல் மற்றும் எரிசக்தி, ஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம், சுகாதாரம், நகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து, உரிமை மற்றும் பிரதிநிதித்துவம் என்பனவற்றில் மக்கள் பிரதிநிதிகள் செலுத்திய அக்கறை, செயல்பாடுகளுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. வாக்களித்த மக்களே! நீங்களே
தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
அஸாம் அப்துல் அஸீஸ்
சாய்ந்தமருது.
0 comments:
Post a Comment