அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாண
கிறிஸ்தவ ஆலயத்தில் துப்பாக்கி சூடு
- 27 பேர் பலி
அமெரிக்காவின்
டெக்சாஸ் மாகாணத்தில்
உள்ள பாப்டிஸ்ட்
கிறிஸ்தவ ஆலயத்தில் மர்ம நபர்
நடத்திய துப்பாக்கி
சூட்டில் 27 பேர் பலியாகினர். மேலும் 30க்கு
மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என தகவல்கள்
தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின்
டெக்சாஸ் மாகாணத்தில்
உள்ள சதர்லேண்ட்
ஸ்பிரிங்ஸ் பகுதியில் அமைந்துள்ள பாப்டிஸ்ட் கிறிஸ்தவ ஆலயத்தில் நேற்று காலை
ஏராளமானோர் கூடியிருந்தனர்.
அப்போது
அங்கு வந்த
மர்ம நபர்
ஒருவர், தான்
கொண்டு வந்திருந்த
துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட
தொடங்கினார். இதனால் கிறிஸ்தவ ஆலயத்தில் பிரார்த்தனையில்
ஈடுபட்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
இந்த கண்மூடித்தனமான
துப்பாக்கி சூட்டில் 27 பேர் பலியாகினர். மேலும்,
30க்கு மேற்பட்டோர்
படுகாயம் அடைந்துள்ளனர்.
தகவலறிந்து
பொலிஸார் சம்பவ
இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் பலியானவர்கள்
உடல்களை கைப்பற்றி
பிரேத பரிசோதனைக்காக
அனுப்பி வைத்தனர்.
குறித்த
துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் 26 வயதுடைய டெவின் பற்றிக்
கெலியெனவும் குறித்த சம்பவத்தில் அவரும்
உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளர்.
துப்பாக்கிதாரியின்
காரும் அவருடைய சூட்கேஸ் பெட்டியொன்றும்
பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
தாக்குதல்
சம்பவத்தின் போது தேவாலயத்தின் போதகரின் 14 வயதுடைய
மகளும் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
படுகாயம்
அடைந்து உயிருக்கு
போராடிய பலரை
ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில்
சேர்த்து சிகிச்சை
அளித்து வருகின்றனர்.
துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமியை சுட்டு
கொன்றதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தை தொடர்ந்து சதர்லேண்ட் ஸ்பிரிங்ஸ்
பகுதியில் பாதுகாப்பு
அதிகரிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment