ஓய்வூதியம் பெறும் நோக்கில்

91 வயது பெண்ணை திருமணம் செய்த 23 வயது வாலிபர்!

அர்ஜெண்டினாவில் 91 வயது பெண்ணை திருமணம் செய்த ஆண், தனது மனைவியின் ஓய்வூதியம் மறுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவர் Mauricio Ossola, வழக்கறிஞரான இவர் கடந்த பெப்ரவரி மாதம் 2015-ஆம் ஆண்டு ஆசிரியரான Yolanda Torres(91) என்பவரை திருமணம் செய்தார்.
இவர்களின் திருமணம் பதிவு செய்யப்பட்டதுடன், இது தொடர்பான செய்தி அப்போது வைரலாக பரவியது.
இந்நிலையில் Yolanda Torres கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் sepsis நோயின் தாக்கத்தால் உயிரிழந்தார்.
அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கணவரான Mauricio Ossola அவரது ஓய்வுதியத் தொகைக்கு விண்ணப்பித்துள்ளார்.
ஆனால் இவர்களது திருமணம் சந்தேகிக்கப்படுவதால், ஓய்வூதியம் அளிக்கப்படுவது மறுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், நான் உச்சநீதிமன்றத்திற்கு செல்ல விரும்புகிறேன், தன்னுடைய வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுவிட்டது.
எங்கள் திருமணம் சட்டப்படி தான் நடைபெற்றது, இதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. நான் Mauricio Ossola-வை யாரும் காதலிக்காத அளவிற்கு காதலித்தேன், அவரின் இழப்பை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இப்படி இருக்கும் நிலையில் தனது மனைவியின் ஓய்வுதியம் ஏன் மறுக்கப்படுகிறது என்றே தெரியவில்லை என்றும் இதற்கு நியாயம் கிடைக்காமல் விடமாட்டேன் எனவும் கூறியுள்ளார்.
பெற்றோரை விட்டு பிரிந்த Mauricio Ossola, தனது பாட்டியான Yolanda Torres-வுடன் வாழந்து வந்தார். அதன் பின் அவரையே திருமணம் செய்து கொண்டார்.

அர்ஜெண்டினா நாட்டு சட்டப்படி ஒரு ஆண் தனது சகோதர,சகோதரிகளின் மகளை திருமணம் செய்யலாம், அதே போல் ஒரு பெண் தனது சகோதர, சகோதரிகளின் மகனை திருமணம் செய்து கொள்ளலாம்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top