சாய்ந்தமருது பிரகடனமும் தீர்மானங்களும்
பச்சோந்தி அரசியலுக்கு சிறந்த ஆப்பு!
நாட்டின் ஜனாதிபதி முதல் பிரதமர் மற்றும் ஹக்கீம் றிசாட்,ஹரீஸ் ஆகியோர்கள் வரை சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபையை வழங்குவோம் பெற்றுத் தருவோம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில் முடிந்த வரை முயன்று கேட்டுக் கேட்டு கிடைக்கவில்லை கிடைக்காது என்ற நிலையில் 3 நாட்கள் சாய்ந்தமருது மக்கள் வீதிக்கு வந்து ஹார்த்தால், வீதி மறியல் போராட்டம் மற்றும் கடையடைப்புச் செய்து தங்களது எதிர்ப்பை காட்டி மிக முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளனர்.
உண்மையில் சாய்ந்தமருது மக்களையும் பள்ளிவாயல் சம்மேளனத்தையும் பாராட்டலாம். சாய்ந்தமருது பள்ளிவாயல் சம்மேளனம் நிறைவேற்றியுள்ள 9 தீர்மானங்களில் மிகவும் முக்கியமான தீர்மானமாக சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை குறித்த வர்த்தமானி பிரகடனம் வெளிவரும் வரை சாய்ந்தமருதுக்குள் எந்தவொரு அரசியல் கூட்டமோ ஆதரவு தெரிவித்த கூட்டங்களோ நடத்த முடியாது என்றும் எந்தவொரு அரசியல் தலைவர்களோ கட்சிப் பிரமுகர்களோ சாய்ந்தமருதுக்கள் பிரவேசிக்க முடியாது என்றும் ஊர்க் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.மீறுவோர்கள் ஊர்த் துரோகிகள் என்றும் இந்திய பஞ்ஞாயத்து முறையில் நாட்டமை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.பாராட்டுக்கள்.
ஆனால் சாய்ந்தமருதுக்கு மட்டுமல்ல மருதமுனைக்கும் நற்பட்டிமுனைக்கும் தனியான 3 தனியான சபைகள் பிரிக்கப்பட வேண்டும். அதேநேரம் அம்பாரை மாவட்ட முஸ்லிம்களின் தாயகம் வர்த்தக தளம் கல்முனைக்கு எவ்விதமான பாதிப்பும் இல்லாதவாறு செயல்பட வேண்டும் என்பதே அம்பாரை மாவட்ட முஸ்லிம்களின் ஒட்டுமொத்த நிலையான நிலைப்பாடு.
கல்முனை மாநகரம் என்பது சகோதர தமிழ் மக்களும் உள்ளார்கள்.அதனால் அந்த மக்களின் நலன்களும் மிகவும் முக்கியமானது.அந்த மக்களுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் இன்றி சாய்ந்தமருது விடயம் அணுகப்பட வேண்டும்.
கல்முனை தமிழர் பாதிக்க கூடாது.
கல்முனை சாய்ந்தமருது விடயத்தினால் விரத்தியினால் கசப்பினால் பாண்டிருப்பு மற்றும் கல்முனை தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் விதமாக முஸ்லிம்கள் நடந்து கொண்டால் எதிர்காலத்தில் இன உறவுக்கு சாவு மணி அடித்து விடும்.
நாம் ஏற்கனவே பல தடவைகள் மோதி விட்டோம்.இரண்டு தரப்பும் இழந்து விட்டோம். இனியும் இந்த மோதல் வேண்டாம். இழப்பும் மோதலும் வேண்டாம் என்ற நோக்கோடு தலைவர் சம்மந்தனோடு முஸ்லிம் தரப்பு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும.இந்தப் பேச்சு வார்த்தைகளில் முஸ்லிம் அரசியல் வியாபாரிகளை மூக்கை நுழைக்க விடாமல் பள்ளி சம்மேளனங்கள் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.
யாருக்கும் பாதிப்பின்றி சபைகள் பிரிக்கப்பட வேண்டும். சாய்ந்தமருது பிரதேச சபை விடயத்தில் ஹக்கீம்; தொட்டு சகல தரப்பாலும் சாய்ந்தமருது மக்கள் ஏமாந்து விட்டார்கள்.இனியும் இந்த ஏமாற்றம் வேண்டாம் என்ற நோக்கத்தோடு தலைவர் சம்மந்தனோடு சாய்ந்தமருது பள்ளிவாயல் சம்மேளனம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
மருதமுனை, நற்பட்டிமுனை, சாய்ந்தமருது பிரதேச சபை விடயமாக அந்தந்த ஊர் பிரதிநிதிகள் சிந்தித்து இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால் அம்பாரை மாவட்ட முஸ்லிம்களின் தாயகம் என்ற கல்முனையின் வர்த்தகத்திற்கும் வர்த்தக தளங்களுக்கும் எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் தீர்வுகள் அமைய வேண்டும்.
சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி. என்பது போல் தேர்தல் காலங்களில் சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை பெற்றுத் தருவோம் என்று பச்சோந்தி அரசியல் நடத்திவரும் முஸ்லிம் அரசியல் வியாபாரிகள் யார் என்பதை சாய்ந்தமருது மக்கள் முற்றாக இனம் கண்டு ஊரை விட்டு ஒதுக்கி வைக்க வேண்டும்.
தலைவர் சம்மந்தனோடு சாய்ந்தமருது, .நற்பட்டிமுனை,மருதமுனை பள்ளிவாயல் சம்மேளனங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோமானால் நிரந்தர தீர்வை எட்டலாம் அதைவிட்டு எதிர்வரும் உள்லூராட்சித் தேர்தலில் சுயேட்சை அணியாக சாய்ந்தமருது மக்கள் களமிறங்கி எந்த இலக்கை அடையவுள்ளோம்.
எந்தவொரு போராட்டங்களும் வெற்றியின் நோக்கை இலக்காக கொண்ட பயணமாக அமைய வேண்டும். எதிர்ப்பு மட்டும் நோக்காக இல்லாமல் வெற்றியே இலக்காக அமைய வேண்டும்.
சாய்ந்தமருது மக்கள் வெற்றி இலக்கு என்றால் தலைவர் சம்மந்தனோடு பேச்சுவார்த்தை நடத்தினால் அந்த இலக்கை அடைந்து கொள்ளலாம்..
- எம்.எம்.நிலாம்டீன்
சாய்ந்தமருது மக்களின் விளக்கம்:
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை வழங்குவதில் தமிழ்
சகோதரர்களுக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை. தமிழ் மக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படப்
போவதும் இல்லை சாய்ந்தமருதில் வாழ்பவர்கள் அனைவரும் முஸ்லிம் மக்களே, தமிழர்கள் இங்கு
எவரும் நிரந்தர குடியிருப்பாளர்களாக இல்லை. சாய்ந்தமருதுக்கென எல்லை எவருக்கும் பிரச்சினை
இல்லாத வகையில் சரியாக அமைந்துள்ளது. இந்த எல்லைகள் கூட தமிழர்களை எந்த வகையிலும் பாதிக்காது.
எதிர்ப்பு தெரிவிக்கப்போவதும் இல்லை.
சாய்ந்தமருதின் தற்கால எல்லை பின்வருமாறு காணப்படுகின்றன.
வடக்கு: கானடி ஒழுங்கை, ஸாஹிறாக் கல்லூரி வீதி
தெற்கு: மாளிகா வீதி, மாளிகைக்காடு
கிழக்கு: வங்காள விரிகுடா கடல்.
மேற்கு: கரைவாகு குடாக்கரை வயல் நிலங்கள்
- மக்கள் விருப்பம்
0 comments:
Post a Comment