தோளில் போட்டுள்ள சிகப்புத் துண்டைக் கொண்டு

தூக்கிட்டுக் கொள்ளுமாறு

நாமலுக்கு கூறிய இராஜாங்க அமைச்சர்


தோளில் போட்டுள்ள துண்டைக் கொண்டு தூக்கிட்டுக் கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்விற்கு, இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க எம்.பி தெரிவித்துள்ளார்.
வரவு செலவு திட்டம் தொடர்பிலான நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற போது மஹிந்த ராஜபக் குடும்பத்தினரை சுஜீவ சேனசிங்க கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தொடர்ந்தும் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க எம்.பி தெரிவிக்கையில்,
அப்பாவும், சித்தப்பாவும், மாமாவும், மகன்மாரும் அனைவரும் இணைந்து இந்த நாட்டின் 8000 பில்லியன் ரூபாயை களவாடியுள்ளனர்.
இந்தக் கூட்டத்தின் கொள்கைகள் காரணமாகவே கடந்த தேர்தல்களில் மக்கள், இவர்களை நிராகரித்தனர்.
போரை வென்றெடுத்த மஹிந்த ராஜபக்வை களவு மோசடிகள் காரணமாகவே வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
மஹிந்தவின் மகன் சிறியதாக இருந்தாலும் சட்டக்கல்லூரி பரீட்சைகளையே திருடியவாராவார்.
சிவில் வழக்கு சரத்துக்கள் எவை என்பது கூட தெரியாமலேயே நாமல் ராஜபக் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
குளிரூட்டப்பட்ட தனியறையில் அமர்ந்தே நாமல் பரீட்சைக்குத் தோற்றியிருந்தார். ஒன்றாக ரகர் விளையாடிய தாஜூடீனை கொலை செய்துள்ளார்.
நான் இந்த அவையில் யார் தாஜூடீனை கொலை செய்தார்கள் என்ற பெயரை குறிப்பிடவில்லை, தொப்பி சரியென்றால் போட்டுக்கொள்ளவும்.

பன்றிகளைக் கொல்லும் கூரிய ஆயுதமொன்றில் லசந்த கொலை செய்யப்பட்டார், கொலை செய்தவர்களை மக்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
வெட்கம் கெட்ட பிழைப்பு பிழைக்கின்றீர்கள் இதற்கு பதிலாக உங்கள் தோளில் போட்டிருக்கும் இந்த சிகப்புத் துண்டடைக் கொண்டு தூக்கிட்டு மடிவது மேல் என சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.
பொய்யான குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்றில் சுமத்தக் கூடாது, ஆதாரங்கள் இருந்தால் நிரூபிக்க வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top