பரீட்சை திணைக்களத்தின் பதில் ஆணையாளர்
கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்
புலமைப் பரிசில் பரீட்சை இலக்கமே
சகல பரீட்சைகளுக்கும்- புதிய
முறைமை
பரீட்சை
திணைக்களத்தின் பதில்; ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள பீ. சனத் பூஜித
நேற்று
தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
முன்னாள்
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ .எம்
.என். ஜே
புஸ்பகுமார கல்வி அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதனை
தொடர்ந்து ஏற்பட்ட
வெற்றிடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்
தேசிய கல்வி
நிறுவனத்தின் பரீட்சை ஆய்வாளராகவும் கல்வி அமைச்சின்
ஆராய்ச்சி மற்றும்
திட்டமிடல் பீடத்தின் பிரதி பணிப்பாளர் நாயகமாகவும்
இதற்கு முன்னர்
சேயையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் மணவர்கள் பயண்படுத்தும்
பரீட்சை சுட்டெண்ணை ஏனைய அனைத்துப் பரீட்சைகளின் போதும் பயன்படுத்தக்கூடிய
வகையிலான நடைமுறையை அமுல்படுத்துவது குறித்து பரீட்சைத் திணைக்களம் கவனம் செலுத்தி
வருவதாக புதிய பரீட்சை ஆணையாளர் சனத் பூஜித கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டதன்
பின்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இதன்படி ஒரே
பரீட்சை இலக்கத்துடன்
நாட்டில் நடைபெறும்
அரச பரீட்சைகள்
அனைத்திலும் ஒரு பரீட்சார்த்தி தோற்றும் முறைமையை
அறிமுகம் செய்யவுள்ளதாக
புதிய பரீட்சைகள்
ஆணையாளர் நாயகம்
பீ. சனத்
புஜித தெரிவித்துள்ளார்.
தரம் 5 புலமைப்
பரிசில் பரீட்சைக்கு
தோற்றும் ஒரு
மாணவர் பெறும்
பரீட்சை சுட்டிலக்கத்தையே ஏனைய சகல பரீட்சைகளுக்கும்
பயன்படுத்த முடியும். இதனால், ஒரு இலக்கத்தின்
கீழ் ஒருவரின்
சகல பரீட்சைகள்
பற்றிய தகவல்களும்
கிடைக்கப் பெறும்
எனவும் ஆணையாளர்
குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment