அரசியல் யாப்பு தொடர்பில்
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கும்
கருத்துக்களை முன்வைக்க சந்தர்ப்பம்
இலங்கையில் அரசியல்யாப்பு பேரவையின் நடவடிக்கை குழுவின் அறிக்கை தொடர்பில் இணையத்தளத்தின் ஊடாக பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசியல் யாப்பு பேரவையின் நடவடிக்கை குழுவின் இடைக்கால அறிக்கை மீதான பாராளுமன்ற 5 ஆம் நாள் விவாதம் 8ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.
இதனை தொடர்ந்து இணையத்தளம் மற்றும் முகப்புத்தகம் மூலம் பொது மக்களின் கருத்துகளை அறியும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது.
இணையத்தளம் மற்றும் முகப்புத்தகம் ஊடாக உள்நாட்டிலும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு புதிய அரசியல் யாப்பு தொடர்பில் தமது கருத்துக்களை முன்வைக்க முடியும்.
அரசியல் யாப்பு திருத்த சட்ட மூலத்திற்காக இணையத்தளத்தின் ஊடாக ஆசிய பசுபிக் பிராந்திய நாடு என்ற ரீதியில் இலங்கை , உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் கருத்தைக் கேட்டறியும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
அரசியல் யாப்பு தொடர்பில் இணையத்தளத்தின் ஊடாக பெறப்படும் ஆலோசனைகள் பொருத்தமான தயாரிப்புக்கள் இணையத்தளத்தளம் மற்றும் முகப்புத்தக செயற்பாட்டாளர்களின் பங்களிப்புக்களை பெற்றுக்கொள்வதற்கு எதிர்வரும் சில தினங்களில் ஒமுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளது .
அரசியல் யாப்பு தொடர்பில் கிடைக்கப்பெறும் அனைத்து முக்கிய ஆலோசனைகளும் அரசியல் யாப்பு செயற்பாட்டுக்குழுவின் அங்கத்தவர்களினதும் கவனத்திற்காக சமர்ப்பிக்கும் வேலைத்திட்டமும் பிரதமரின் ஆலோசனைக்கமைவாக முன்னெடுக்கப்படவுள்ளது.
0 comments:
Post a Comment