முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய
இன்று கைது செய்யப்படுகிறார்?
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ இன்று கைது செய்யப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மஹித ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைக்காக இன்று அழைக்கப்படவுள்ள கோத்தாபய ராஜபக்ஸ, கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளார் அவரை விளக்கமறியலில் வைத்து விசாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அம்பாந்தோட்டையில் டி.ஏ.ராஜபக்ஸ நினைவிடம் அமைப்பதற்காக அரசாங்க நிதியைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், கோத்தாபய ராஜபக்ஸ விரைவில் கைது செய்யப்படுவார் என்று முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
கோத்தாபய ராஜபக்ஸவை கைது செய்வதற்கு சட்டமா அதிபர் அனுமதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளை, கோத்தாபய ராஜபக்ஸவை கைது செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ நேற்றிரவு தெரிவித்துள்ளார்.
எலிய அமைப்பின் மூலம், புதிய அரசியலமைப்புக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் பரப்புரைகளை நிறுத்தவே கோத்தாபய ராஜபக்ஸவை கைது செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment