ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய சபையின்
அங்கத்தவர் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்
இவ்வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய சபையின் அங்கத்தவர் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.
புலமைப்பரிசில் தொகையாக மாணவர் ஒருவருக்கு 15ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளது.
ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் அங்கத்தவர்களாக உள்ள நிறுவனங்கள் பெருந்தோட்டதுறை தோட்ட தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் பிள்ளைகள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.
மாவட்ட மட்டத்தில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற 9ஆயிரம் மாணவர்களுக்கு இந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவங்கள் இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்கப்படல் வேண்டும். இது தொடர்பான விபரங்களை ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தில் இணையத்தளத்தில் பார்வையிடமுடியும்.
0 comments:
Post a Comment