சைற்றம் ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு

புதிய குழு ஜனாதிபதியால் நியமனம்


சைட்டம்  மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் யோசனைகளை முன்வைக்க புதிய கண்காணிப்பு குழுவொன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள 9 அங்கத்தவர்களை உள்ளடக்கிய இக்குழுவுக்கு பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா தலைமை தாங்கவுள்ளார்.

சைட்டம் தொடர்பில் முன்னார் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தவும், புதிய யோசனைகள் இருப்பின் அது பற்றி ஆராயவும் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

சைற்றம் நிறுவனம் வைத்திய பட்டத்தை வழங்குவது தொடர்பான பிரச்சனைகளை கண்டறிந்து அதற்கான தீர்வை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி இதற்கு முன்னர் பிரதி அமைச்சர் ஹர்சடி சில்வா தலைமையில் குழு ஒன்றை நியமித்திருந்தார்.

இந்த குழு இதற்காக ஏற்றுக்கொள்ளக்கூடிய சாதகமான ஆலோசனைகள் பலவற்றை சமர்ப்பித்திருந்தது. இந்த தீர்வு ஆலோசனைகளை பல்கலைக்கழக வைத்திய பீட வைத்தியர்களுக்கும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் வைத்திய பீட பெற்றோருக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் முழுமையான உடன்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும் என்று பல்வேறு தரப்பினர் ஆலோசனைகளை முன்வைத்திருந்தனர்.

இதற்கமைவாக இந்த குழு சமர்ப்பித்த ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் இந்த ஆலோசனைகளில் உள்ளடக்கப்படாத பிரச்சனைகள் உள்ளடக்கப்படுமாயின் அவற்றை கவனத்தில் கொண்டு தேவையான தீர்வு ஆலோசனைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய குழுவை நியமித்துள்ளார்.


The committee headed by Dr. Harsha de Silva, Deputy Minister of Policy Planning and Economic Development and consists of Janaka Sugathadasa, Secretary to the Ministry of Health, Nutrition and Indigenous Medicine, D. C. Dissanayake, Secretary to the Ministry of Higher Education and Highways, Prof. Mohan de Silva, Chairman, University Grant Commission, Prof. Colvin Gunaratne, Chairman, Sri Lanka Medical Council, Prof. Lakshman Dissanayake, Vice Chancellor, University of Colombo, Prof. Sampath Amaratunga, Vice Chancellor, University of Sri Jayewardenepura, Prof. Jenifer Perera, Dean, University of Colombo, Prof. Nilanthi de Silva, Dean, University of Kelaniya and observers are from Government Medical Officers’ Association, Medical Faculty Lecturers’ Association and Medical Students’ Parents Association, each.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top