கல்முனை வடக்கு புதிய பிரதேச சபைக்கான
திட்ட முன் மொழிவு கையளிப்பு
கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ளடங்கும் தமிழ்க் கிராமங்களை ஒன்றிணைத்து புதிய பிரதேச சபை ஒன்றினை ஸ்தாபிப்பதற்கான திட்ட முன் மொழிவினை கல்முனை-1ஏ பிரிவு கிராம அபிவிருத்திச் சங்கம் அம்பாறை மாவட்ட அரசாங்க அலுவலகத்தில் கையளித்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களை தரம் உயர்துதல் மற்றும் ஸ்தாபித்தல் தொடர்பான திட்ட முன் மொழிவுகளை முன் வைக்குமாறு வெளியாகியுள்ள கோரிக்கைக்கமைவாக கல்முனை தமிழ் பிரிவிலுள்ள கிராமங்களை ஒன்றினைத்து புதிய பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டும் என்பதை வலிறுத்தியே இத் திட்ட முன் மொழிவு கையளிக்கப்பட்டுள்ளது.
இங்கு புதிய பிரதேச சபை ஸ்தாபிக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றிய கலந்துரையாடல் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.புஸ்பகுமார் தலைமையில் கடந்தவாரம் பாண்டிருப்பில் நடைபெற்றது இதற்கமைய இத் திட்டம் முன் மொழியப்பட்டுள்ளது.
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.புஸ்பகுமார் (இனிய பாரதி) தலைமையில் மாவட்ட செயலகம் சென்ற குழுவில் கல்முனை ஸ்ரீ சுபத்திரராம மஹா விகாரையின் விகாரதிபதி சங்கைக்குரிய ரன்முத்துகல சங்கரெட்ண தேரர், கல்முனை கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் இ.இராஜரெத்தினம், கரைவாகுப் பற்று விவசாய அமைப்பின் பிரதி நிதி வி.தங்கவேல், கல்முனை தமிழ் வர்த்தக சங்கம் லிங்கன் உட்பட கல்முனை பிரதேச கல்விமான்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இப் பிரதேசத்திற்கு புதிதாக பிரதேச சபை அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி முதன் முதலில் எழுத்து மூலமான திட்ட முன் மொழிவு ஒன்றினை இக் குழுவினரே கையளித்துள்ளனர்.
0 comments:
Post a Comment