சாய்ந்தமருதில் ஏனைய அரசியல்வாதிகளுடன்
அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கும்
உருவ பொம்மை எரித்தது சரிதானா?
நடுநிலை மக்கள் கவலை!
சாய்ந்தமருதில் ஏனைய அரசியல்வாதிகளுடன் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கும் உருவ பொம்மை எரித்தது குறித்து நடுநிலை மக்கள் கவலை வெளியிட்டுள்ளதுடன் மக்களுக்கு
வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் ஏமாற்றப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க
முன் வந்தவருக்கு ஏமாற்றியவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை இவருக்குமா என்றும்
கேள்வி எழுப்பியுள்ளனர்.
சாய்ந்தமருது மக்களுக்கு தேர்தல் காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ்
மேடையில் நாட்டின் பிரதமராலேயே வாக்குறுதி அளிக்கப்பட்ட சாய்ந்தமருதுக்கான பிரதே சபை வழங்கும்
வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் கால தாமதப்படுதப்படுவதை அறிந்து மக்களின் வேண்டுகோளுக்கிணங்க
அதனைத்துரிதப்படுத்தும் நடவடிக்கைகளில் உறுதியாக நின்ற ஒருவர்தான் அமைச்சர் றிஷாட் பதியுதீன்.
அம்பாறை மாவட்டத்தில் ஒரு பிரதிநிதியும் இல்லாத நிலையில் தனது
கட்சிக்கு 33 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வாக்களித்திருந்தற்கு நன்றிக் கடனாக சாய்ந்தமருது
மக்களுக்கு இக்கைங்கரியத்தை செய்ய அவர் முன் வந்தார். இதற்கு பொறுப்பான அமைச்சரை மக்கள்
காலடிக்கே கொண்டு வந்து மக்களுக்கு பொறுப்பான அமைச்சர் மூலமாக வாக்குறுதியை வழங்க ஏற்பாடு
செய்தார். (அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் கொடுக்கப்பட்ட வாக்குறுதி கூட அரசியல் மேலிடத்திற்கு
கொண்டு செல்லப்பட்டு நயவஞ்சகமாகத் தடுக்கப்பட்டுள்ளது) அதனை சரியாக புரிந்து கொள்ளாததன்
விளைவே இந்த கொடும்பாவி எரிப்பு என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
நிறைவேற்றித்தருவதாக வாக்களித்து, அதற்கான பல்வேறுபட்ட முன்னெடுப்புக்களை மேற்கொண்டதாகவும்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்தும் வாக்குறுதியை பெற்றுக் கொடுத்ததாகவும் அமைச்சர்
றவூப் ஹக்கிம் தலைமையில் பல சந்தர்ப்பங்களில் சாய்ந்தமருது உள்ளுராட்சிசபை விடயமாக
சம்மந்தப்பட்ட அமைச்சர்களுக்கு பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்து வருவதாகவும் தற்போது
அதற்க்கான காலம் கணிந்துள்ளதாகவும் கூடிய விரைவில் சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சிசபை
பிரகடனப்படுத்தப்படும் தான் அந்த விடயத்தில் மிகுந்த இறை அச்சத்துடன் செயற்படுவதாகவும்
பள்ளிவாசலில் வைத்தே வாக்குறுதியளித்ததாகவும் மேடைகளில் பகிரங்கமாகக் கூறிவந்த சாய்ந்தமருது
மக்களின் வாக்குகளைப் பெற்ற பிரதி அமைச்சரான எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களே தற்போது நிலை மாறியுள்ளார்
இது போன்று அமைச்சர் ரிஷாட் வாக்குகளைப் பெறுவதற்காக தேர்தல்
காலங்களில் இதற்கான வாக்குறுதியை வழங்கிவிட்டு ஏனைய அரசியல்வாதிகள் போன்று நிலை மாறியதில்லை.
சாய்ந்தமருது மக்களின் வாக்குகளைப்பெற்ற கட்சியின் தலைவர் அரசாங்க
மேலிடத்தில் அம்பாறை மாவட்டத்தில் எங்கள் கட்சியே 3 ஆசனங்களுடன் இருக்கின்றது. ரிஷாத்
கட்சியினருக்கு அம்பாறை மாவட்டத்தில் எந்த ஆசனமும் இல்லை அவர்களால் இது குறித்து முடிவு
எடுக்க முடியாது. அவரை இந்த விடயத்தில் அமைதியாக இருக்கச் சொல்லுங்கள் என்று கூறப்பட்டு
அமைச்சர் ரிஷாத்தினதும் பைஸர் முஸ்தபாவிநதும் வேகத்தை நிறுத்தியது எத்தனை பேருக்கு
தெரியும்?
சாய்ந்தமருது மக்களின் வாக்குகளால் அரசியல் அதிகாரம் பெற்றவர்களே
சாய்ந்தமருது மக்களின் விருப்பத்திற்கு மாறாக மறைமுகமாக செயல்பட்டிருக்கிறார்கள். பள்ளிவாயலில்
வைத்தே வாக்குறுதி கொடுத்து விட்டு அதற்கு மாறாக செயல்பட்டிருக்கிறார்கள். முனாபிக்குகள்
செய்யாத கருமங்களை பள்ளிவாயல்களை (சாய்ந்தமருது பெரிய பள்ளிவாயல், கொள்ளுப்பிட்டி பள்ளிவாயல்)
மையமாக வைத்து சாய்ந்தமருது மக்களை நம்பவைத்து ஏமாற்றியிருக்கிறார்கள்!
அப்படி இந்த மக்களின் வாக்குகளால் அதிகாரம் பெற்றவர்கள் செய்திருப்பது
போன்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இந்த மக்களை ஏமாற்றி துரோகம் செய்யவில்லையே.
அமைச்சர் ரிஷாதின் இது குறித்த செயல்பாடுகளை இந்த மக்களால் அதிகாரம் வழங்கப்பட்டவர்களால்
அரசியல் மேலிடங்களுக்குச் சென்று நயவஞ்சகமாகத் தடுத்து நிறுத்தப்பட்டது.
இப்படியான நிலையில் அப்பாவியான அமைச்சர் ரிஷாத்துக்கு ஏன் உருவ
பொம்மை கட்ட வேண்டும்?
இவர் பிரதமரைக் கூட்டி வந்து மக்கள் முன் வாக்குறுதி கொடுத்தாரா?
மற்றவர்களால் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க முற்பட்டாரே
தவிர மக்களை ஏமாற்றவில்லையே. நயவஞ்சகமாகத் தடுக்கப்பட்டவர் அமைச்சர் ரிஷாத்.
கிழக்கு மக்களுக்கான அபிவிருத்தி அரசியல் மட்டும் அல்ல இவர்களுக்கான
உரிமை விடயத்திலும் அமைச்சர் நீதியாக நடந்துகொண்டு வருகின்றார் ஆனால் ஒரு சிலரின் காட்டிக்கொடுப்பு
ஏமாத்து வித்தைகளுக்கு மத்தியில் தனியாக நின்று போராடுகிறார் அமைச்சர் றிஷாட் பதியுதீன்.
அவருக்கு சாய்ந்தமருதில் உருவ பொம்மை எனபது
வேதனையான விடயம் என நடுநிலை மக்கள் கூறியிருக்கிறார்கள். அமைச்சரிடம் இந்த விடயத்திற்காக
மன்னிப்புக் கோருகின்றார்கள்
0 comments:
Post a Comment