நாம் சொல்வதெல்லாம் உண்மை

உண்மையைத் தவிர வேறில்லை

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை 

கோரிக்கையின் வரலாறு



இற்றைக்கு 120 வருடங்களுக்கு முன்னர் 1897ம் ஆண்டு  வெளியான சாய்ந்தமருது சனிற்றரி சபை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் உள்ள நிலையில் 1936ல் இருந்து பத்து அங்கத்தவர்களைக் கொண்ட கரவாகு தெற்கு கிராம சபையாக இயங்கி வந்த சாய்ந்தமருது உள்ளுராட்சி நிருவாகமானது 1987ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளுராட்சி சபைகள் திருத்தச் சட்டத்தை பயன்படுத்தி கல்முனையோடு இணைக்கப்பட்டது.
அன்று தொடக்கம் இன்றுவரை மக்களின் தேவைகள் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் மற்றும் அபிவிருத்திகள் எதுவுமே மக்களின் திருப்திக்கேற்ப  நிறைவேற்றப்படவில்லை என்பது வரலாறு.

தனியான உள்ளுராட்சி சபைக் கோஷம்

உள்ளுராட்சி சபைகளின் அறிமுகத்தைத் தொடர்ந்து அதன் நன்மைகள், பலாபலன்கள் பற்றி நன்கு தெரிந்து கொண்ட பொதுமக்கள் சமூக, அரசியல், அபிவிருத்தி தொடர்பிலான அபிலாஷைகள் புறக்கணிக்கப்பட்டமை காரணமாக 1988ம் ஆண்டிலிருந்து சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபைக் கோரிக்கையை முன்வைத்தனர். இந்தக் கோரிக்கையின் வயது கிட்டத்தட்ட 30 வருடங்களாகின்றது.
மேலும் 1999.04.21ம் திகதி நாடாளுமன்றத்தில் பிரதேச சபைகள் திருத்த சட்டமூலத்தில் கலந்து கொண்ட மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவரும் அமைச்சருமான எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் உரையாற்றும்போது, சாய்ந்தமருதுக்குத் தனியான பிரதேச சபையை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று குரல் எழுப்பினார். இச்சட்டமூல விவாதத்தில் கலந்துகொண்ட முஸ்லிம் காங்கிரஸின் இன்றைய தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்கள் கல்முனைப் பிரதேசத்திலே சாய்ந்தமருதுக்கு தனியான  செயலகமும் பிரதேச சபையும் அமைய வேண்டும் என்று கூறியதுடன் இருபதுக்கு மேற்பட்ட மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன என்ற விபரத்தையும் எடுத்துக் காட்டியிருந்தார்.

கோரிக்கைக்கான முன்னெடுப்புகள்

உள்ளுராட்சி மாகாண சபைகள் விடயத்திற்கு பொறுப்பான முன்னாள் அமைச்சர் .எல்.எம்.அதாவுல்லாவிடம் சாய்ந்தமருது மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் நிருவாகம் 2011ம் ஆண்டு தனியான உள்ளுராட்சி கோரிக்கையினை  எழுத்து மூலம் விடுத்தனர்.
இதன் பின்னர் தனியான சபைக் கோரிக்கை வலுப்பெற்றதைத் தொடர்ந்து 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது இவ்விடயம் முக்கியமாகப் பேசப்பட்டது.
இன்ஷா ல்லாஹ் யாருக்கும் எந்த சமூகத்துக்கும் எந்த பிரதேசத்துக்கும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் சாய்ந்தமருதுக்குரிய உள்ளுராட்சி சபையை உருவாக்கித் தருவேன் என்று சாய்ந்தமருது லீமெரிடியன் மண்டபத்தில் 24.03.2014ஆம் திகதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தின்போது அளித்த வாக்குறுதிக்கேற்ப கல்முனையை நான்காகப் பிரித்து சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபையை வழங்குவதற்கு முன்னாள் அமைச்சர் அதாவுல்லா முயற்சி மேற்கொண்டார். எனினும் கல்முனை முஸ்லிம் பிரிவு பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தின் தலைவர் தேர்தல் ஆணையாளருக்கு எழுதியனுப்பிய கடிதத்தின் மூலமாக இம்முயற்சி தடுக்கப்பட்டது.
கல்முனையை நான்காகப் பிரிக்க வேண்டும் என்று இப்போது கோரிக்கை முன்வைப்பவாகள்தான் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா கல்முனையை நான்காகப் பிரிப்பதற்கு எடுத்த முயற்சியைத் அப்போது தடுத்தார்கள் என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும்.

மேலும் 2015ல் பதவியேற்ற மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இந்தக்கோரிக்கையை வென்றெடுப்பதற்கான முயற்சிகள் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸின் சம்மதத்தோடும் வாக்குறுதியோடும் மேற்கொள்ளப்பட்டன.
இதன் அடிப்படையில், பல சந்திப்புகளின் பின்னர், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீமின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசீம், எம்..எம்.மன்சூர், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் ஹஸனலி, கட்சியின் தற்போதய தவிசாளர் அப்துல் மஜீத், கிழக்கு மாகாகண சபையின் முன்னாள் உறுப்பினர் .எம்.ஜெமீல் ஆகியோரின் பிரசன்னத்துடன் சாய்ந்தமருதுமாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் நிருவாகம் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அழைத்துச்சென்று அப்போது உள்ளுராட்சி மாகாண சபைகள் மற்றும் புத்தசாசன அமைச்சராக இருந்த தற்போதைய சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபையை வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களும் தனது அமைச்சு செயலாளருக்கு மேற்படி கோரிக்கையை நிறைவேற்றுவதற்குத் தேவையான ஆவணங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கினார்.
அதற்கமைய மீண்டுமொருமுறை சாய்ந்தமருதுமாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினரால் தனியான உள்ளுராட்சி சபைக்கான விண்ணப்பம் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக உள்ளுராட்சி அமைச்சின் செயலாளருக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
மேலும் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் உறுப்பினரும் குழுக்களின் தலைவருமான .எம்.ஜெமீல் அவர்களினால் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை கோரிக்கையை முன்வைத்து தனிநபர் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேற்படி தீர்மானம்  உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் செயலாளருக்கு தவிசாளரினால் அனுப்பிவைக்கப்பட்டது. இந்த நிலையில் 2015ல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக்கோரிக்கையும், 2015ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலும் பிரதமரின் வாக்குறுதியும்

முஸ்லிம் காங்கிரஸ் தற்போதய தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீம் மற்றும் பிரதியமைச்சர் ஹரீஸ் ஆகியோரினால் பல சந்தர்ப்பங்களில் நம்பிக்கையூட்டும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில் 09.08.2015ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீமின் தலைமையில் ஹரீஸை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்கப்படும் என்று சிங்களத்தில் வழங்கிய வாக்குறுதியை முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய செயலாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சட்டமுதுமானியுமான நிசாம் காரியப்பர் மிகவும் தெளிவாக தமிழில் மொழிபெயர்த்திருந்தார். அக்கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்களின் ஏகோபித்த தக்பீர் முழக்கத்துடன் இந்த வாக்குறுதி ஏற்றுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கல்முனை நகரில் 2015.08.09ல் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரச்சார மேடையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வழங்கிய வாக்குறுதி-----
*********************************************************************************

சாய்ந்தமருது பிரதேசத்திற்கான  தனியான பிரதேச சபை எனும் விடயம் பிரதமர் கொடுத்த வாக்குறுதிஇந்தமக்களுடைய அதிக பட்ச ஆணையைப் பெற்ற இந்த இயக்கத்தின் ஊடாக பெறப்பட்ட வாக்குறுதிஅதைஇந்த இயக்கம்தான் நிறைவேற்றித் தரும் என்பதை மிகத் தெளிவாக நான் சொல்லியாக வேண்டும்அதிலேஎந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
இதிலே விஷமத்தனமாக புகுந்து விளையாடுவதற்குமுழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும்முடிச்சுப்போட பலர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இல்லாத பொல்லாத கதையெல்லாம் கட்டி இந்த விவகாரத்தில் ஒவ்வொருவரும் தங்கள் சொந்தஅரசியலைச் செய்யலாம் என்று நினைத்தால் அது முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிடத்தில் பலிக்காதுஎன்பதை மிகத் தெளிவாக நான் சொல்லியாக வேண்டும்.
இது முஸ்லிம் காங்கிரஸ் தலைமையுடைய சொந்த அரசியலுமல்லஇது நாங்கள் கொடுத்திருக்கின்ற ஒருவாக்குறுதிதலைமை வாக்குறுதி ஒன்றைக் கொடுத்திருக்கின்ற போது அது நிறைவேறப்பட்டேயாகவேண்டும்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம்
கல்முனை நகரில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரச்சார மேடையில்
2015.08.09

எனினும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகு பிரதமரினால் வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படுவதற்கு எதுவிதமான காத்திரமான நடவடிக்கையும் எடுக்கப்படாததன் காரணமாக சாய்ந்தமருதுமாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் நிருவாகமும் சிவில் அமைப்புகளும் அமைச்சர் றவூப் ஹக்கீம் மற்றும் பிரதியமைச்சர் ஹரிஸ் ஆகியோரை பல தடவைகள் சென்றும் வரவழைக்கப்பட்டும் பல சந்திப்புக்களை ஏற்படுத்தினர். அவ்வாறான சந்திப்புக்களின் போதெல்லாம் உள்ளுராட்சி சபை  கோரிக்கை தொடர்பாக றவூப் ஹக்கீம் சாய்ந்தமருதில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் மர நடுகை விழாவில் பேசும்போது இது முஸ்லிம் காங்கிரஸ் தலைமை வழங்கிய வாக்குறுதி அதனை முஸ்லிம் காங்கிரஸ்தான் கொண்டு வரவேண்டும் அது ஒரு வஃதா (வாக்குறுதி) என்று கூறியதை  மீண்டும் மீண்டும் ஞாபகமூட்டப்பட்டது. எனினும் இழுத்தடிப்புத் தொடர்ந்தது.
சாய்ந்தமருதில் இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் கிளையினை திறந்து வைக்கின்ற நிகழ்வு 21.10.2016 இல் நடைபெற்றபோது அமைச்சர்களான றிசாத் பதியுத்தீன் மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டனர். அங்கு பேசிய உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா அமைச்சர் றிஷாத்தும் இக்கூட்டுத்தாபன தலைவர் ஜெமீலும்தான் அடிக்கடி என்னிடம் வந்து உங்களுடைய உள்ளுராட்சி சபை தொடர்பாக பேசுகிறார்கள். ஏனையவர்கள் புகைப்படம் எடுப்பதற்காகவே வருகிறார்கள். நான் உங்களுக்கான உள்ளுராட்சி சபையை கூடிய விரைவில் பிரகடனம் செய்வேன் என்று வாக்குறுதி வழங்கினார். ஆனாலும் அது வாக்குறுதியாக மாத்திரமே இருந்தது.
இதற்கிடையில், பிரதமரின் வாக்குறுதியை மேலும் வலுவூட்டும் விதமாக சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பிரதியமைச்சர் ஹரீஸினால் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை விரைவாக வழங்கப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்டு  முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவராகவும் கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வராகவும் இருந்த அக்கட்சியின் தற்போதைய தவிசாளர் அப்துல் மஜீத்தினால் வழிமொழியப்பட்டு  தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
ஆனாலும் இத்தனை வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தும் சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை பிரகடனப்படுத்தப்படுவதற்குரிய எந்த அறிகுறிகளும் தென்படவில்லை.
இதனால் மீண்டுமொரு தடவை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீமை கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் வைத்து சந்தித்து பிரதமரிடம் அழைத்துச் சென்று இந்த விடயத்தை விரைவுபடுத்துமாறு சாய்ந்தமருதுமாளிகைக்காடு பள்ளிவாசல் நிருவாகமும் சிவில் அமைப்புகளும் கேட்டுக்கொண்டன. இதற்கிணங்க இந்த முயற்சியின் 38 வது சந்திப்பாக, அமைச்சர் றவூப் ஹக்கீம் தலைமையில் மேற்படி குழுவினர் சென்று சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையைக் கொடுப்பதற்கான அவசியத்தை பிரதமருக்கு வலியுறுத்தினர். நாட்கள் நகர்ந்தனவே தவிர சபை பிரகடனப்படுத்துப்படுவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.
அண்மையில் காலஞ்சென்ற மர்ஹும்  ஜப்பார் அலியின் (நிந்தவூர்) 3ம் நாள் கத்தமுல் குர்ஆன் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கொழும்பிலிருந்து வருகை தந்த அமைச்சர் றவூப் ஹக்கீமை இந்த முயற்சியின் 39 வது சந்திப்பாக  பிரதியமைச்சர்களான பைசால் காசீம் மற்றும் ஹரீஸ் ஆகியோரின் பிரசன்னத்துடன் சாய்ந்தமருது  மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் நிருவாகமும் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் நிந்தவூரில்  சந்தித்து சபை தொடர்பான முன்னேற்றத்தை வினவினர். இவ்வேளையில் தலைவர் ஹக்கீம் நான் உங்களை பிரதமரிடம் அழைத்துச் சென்று இது தொடர்பில் கதைத்து விட்டேன். தனக்கும் அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கும் இடையில் உறவு சரியில்லை. எனவே நீங்கள் பைசர் முஸ்தபாவிடம் சென்று இது தொடர்பில் கேளுங்கள் என்று சந்திக்கச் சென்ற குழுவினரிடம் சொன்னார்.
இதனையடுத்து இந்த முயற்சியின் 40 வது சந்திப்பாக சாய்ந்தமருது  மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் நிருவாகம், சிவில் அமைப்புகள் மற்றும் ஊர் பிரமுகர்கள் ஆகியோர் சார்பான பிரதிநிதிகள் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி .எம். ஜெமீலின் உதவியோடு அமைச்சர் றிசாத் பதியுதீன் மூலமாக அமைச்சர் பைசர் முஸ்தபாவை 2017.10.19ம் திகதி அவரது அமைச்சில் சந்தித்து உள்ளுராட்சி சபை தொடர்பில் அவருக்கிருந்த சந்தேகங்களைத் தெளிவுபடுத்தினர். அப்போது அமைச்சர் பைசர் முஸ்தபா இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினரையும் அழைத்து அமைச்சர்களான றவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன் ஆகியோர் முன்னிலையில் கலந்துபேசி ஒரு முடிவுக்கு வருவோம் என்று சொன்னார்.

அதன் பிரகாரம் இந்த முயற்சியின் 41 வது சந்திப்பாக மறுநாள் அதாவது 2017.10.20 ஆம் திகதி சாய்ந்தமருது மற்றும் கல்முனைத் தரப்பிலிருந்து தலா ஆறு பேர் வீதம் அமைச்சர்களான றவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன், பிரதியமைச்சர் ஹரீஸ், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் ஆகியோரின் பிரசன்னத்தில், அமைச்சர் பைசர் முஸ்தபாவின் தலைமையில் அவரது அமைச்சில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது சாய்ந்தமருது தரப்பினர், தமக்கான உள்ளுராட்சி சபையை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர். கல்முனை முஸ்லிம் பிரிவு சார்பில் கலந்து கொண்டவர்கள்; சாய்ந்தமருதுக்கு தனியாக சபை வழங்கும் போது கல்முனையை நான்காகப் பிரித்துத்தான் வழங்க வேண்டும் என்று கூறினர். சாய்ந்தமருதுக்கு மாத்திரம் தனியான சபை வழங்க முடியாது என்ற கருத்தில் விடாப்பிடியாக இருந்தனர். இதனையடுத்து கல்முனையை நான்காகப் பிரிப்பதற்கு அமைச்சர்களான ஹக்கீம், றிசாத் ஆகியோர் சம்மதம் தெரிவித்த நிலையில் அமைச்சர் பைசர் முஸ்தபா பின்வருமாறு தனது இறுதி முடிவை அறிவித்தார்.
சாய்ந்தமருதுக்கான சபை தனியாக பிரியுமிடத்து கல்முனை பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்படுமாயின் முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை கைச்சாத்திட்டு பிரச்சினையை தீர்க்கலாம் என்று கூறினார். அத்துடன் கல்முனையை நான்காக உடனடியாக பிரிப்பதாயின் அமைச்சர்களான ஹக்கீமும், றிசாத்தும் ஒன்றாக பிரதமரிடம் சென்று அதற்கான சம்மதத்தைப் பெற்று வரவேண்டும் என்றும் தெரிவித்தார்.
நான்காக பிரிப்பதில் காலதாமதம் ஏற்பட்டால் என்ன செய்வது என்று சாய்ந்தமருது தரப்பினர் வினவியபோது பிரதமரினாலும் என்னாலும் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கிணங்க சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையை, உள்ளுராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரகடனம் செய்வேன் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையில் உள்ளுராட்சி மன்ற தேர்தல் மற்றும் நுவரெலியா மாவட்ட உள்ளுராட்சி பிரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் அமைச்சர் கையெழுத்திடவுள்ளார் என்ற செய்தி ஊடகங்கள் வாயிலாக பரவியது. இதனை அறிந்து கொந்தளித்த சாய்ந்தமருது மக்கள் தங்கள் கோரிக்கை புறந்தள்ளப்பட்டதை அறிந்து கொதித்தெழுந்தனர். 29.10.2017 ஞாயிறு இரவு பள்ளிவாசல் தலைமையில் பொதுக்கூட்டம் நடாத்தி தங்களது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தினர்.
சாய்ந்தமருதில் பொதுக்கூட்டம் நடைபெற்ற அதேவேளை  கல்முனை ஆஷாத் கூட்ட மண்டபத்தில் பிரதி அமைச்சர் ஹரிஸ் ஆற்றிய உரையில் கல்முனையை நான்காக பிரிக்காமல் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்கப்படுவதை பகிரங்கமாகவும் பலமாகவும் எதிர்த்தார். இந்த விடயம் என்னையும் மீறி நடந்தால் அந்த நிமிடமே கல்முனைக்குடி மக்களுக்கு தெரியப்படுத்திவிட்டு எனது அமைச்சர் பதவியை மாத்திரமல்ல பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கூட இராஜினாமா செய்வதற்கும் தயங்கமாட்டேன் என்று மிகவும் அழுத்தமாக பேசினார்இதனை முகநூல் வாயிலாக நேரலையாக பார்த்த மக்கள் ஏற்கனவே பள்ளிவாசல் முற்றத்தில் திரண்டிருந்த மக்களோடு ஒன்று சேர்ந்து இந்த பொதுக்கூட்டத்தை தொடர் போராட்டமாக முன்னெடுப்பதற்கு தீர்மானித்து செயற்பட்டும் வருகின்றார்கள்.
இதன் காரணமாக சாய்ந்தமருது நிலவரம் தொடர்பாக விஷேட பத்திரிகையாளர் மாநாடு நடாத்திய அமைச்சர் பைசர் முஸ்தபா கல்முனையில் பிரதமரும் தாமும்  வழங்கிய வாக்குறுதிக்கமைய அரசு சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி மன்றத்தை வழங்க இன்றும் தயாராகவுள்ளது. அப்பகுதி மக்களது ஆணையைப் பெற்ற அமைச்சர்களான ஹக்கிம் மற்றும் றிசாட் ஆகியோர் தங்களது விருப்பத்தை தெரிவிப்பார்களாயின் உடன் நிறைவேற்ற அரசு தயார் நிலையில் உள்ளது என்றும் தெரிவித்தார். ஆனால் இன்று வரை எந்த விதமான விடையும் காணப்படாத வினாவாக சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை தொடர்பான நிலைமை தொடர்கின்றது.

கல்முனை மாநகர சபை இனரீதியாக சனத் தொகையும் வாக்காளர் தொகையும் – 2016

பிரதேச செயலகப் பிரிவு
சனத்தொகை

வாக்காளர் தொகை


முஸ்லிம்கள்
தமிழர்கள்
முஸ்லிம்கள்
தமிழர்கள்
கல்முனை(மு.பி)
50,557
-
30,888
-
கல்முனை(த பி)
585
36,416
-
21,012
சாய்ந்தமருது
30,442
-
19,032
-
மொத்தம்
81,584
36,416
49,920
21,012

கல்முனை மாநகர சபை வட்டாரப் பிரிப்பு
மொத்த உறுப்பினர்கள் 24+16=40

வட்டாரப் பிரதேசம்
முஸ்லிம் உறுப்பினர்கள்
தமிழ் உறுப்பினர்கள்
மொத்த உறுப்பினர்கள்
பெரிய நீலாவணை
01
01
02
மருதமுனை
03
-
03
பாண்டிருப்பு
-
02
02
சேனைக்குடியிருப்பு
-
01
01
நற்பிட்டிமுனை
01
01
02
கல்முனை


01
01
இஸ்லாமாபாத்
01
01
02
கல்முனைக்குடி
05
-
05
சாய்ந்தமருது
06
-
06
மொத்தம்
17
07
24


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top