எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஐயாவிடம்
சாய்ந்தமருது – மாளிகைக்காடு பள்ளிவாசல்
தலைவர் வை.எம்.ஹனிபாவின் பகிரங்க கோரிக்கை
கல்முனை மாநகர சபை பிரிப்பு விடயமாக தற்போது சம்பந்தன் ஐயாவிடம் பந்து இருக்கின்றது. இதனைத் தீர்க்கவேண்டிய பொறுப்பு அவரிடம் இருந்து கொண்டிருக்கிறது. எல்லாத் தரப்பினராலும் கட்சியினராலும் அங்கிகரிக்கப்பட்ட சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபையை வழங்குவதற்கு தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு உதவுமாறு அன்பான வேண்டுகோளை விடுக்கவிரும்புகின்றோம் என சாய்ந்தமருது
– மாளிகைக்காடு பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனிபா சாய்ந்தமருது கடற்கரையில் இன்று (2017.11.21)
மாலை இடம்பெற்ற கூட்டத்தில் பகிரங்க கோரிக்கைவிடுத்தார்.
இக்கூட்டத்தில் பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனிபா தொடர்ந்து பேசுகையில் மேலும்
தெரிவித்ததாவது,
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி வழங்கும் விடயம் எல்லாக் கட்சியினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட
விடயமாகும்.
கல்முனை மாநகர சபையை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கும் விடயத்தை தமிழ் தேசியக்
கூட்டமைப்பைச் சேர்ந்த எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் ஐயாவிடம்
வழங்கப்பட்டிருக்கிறது.
இதற்கென நாளை 22 ஆம் திகதி சம்பந்தன் ஐயா தலைமையில் ஒரு
கூட்டம் இடம்பெறவிருக்கிறது.
சம்பந்தன் ஐயாவிடம் சாய்ந்தமருது மக்கள் சார்பாக நாங்கள் ஒரு கோரிக்கையை விடுக்கவிரும்புகின்றோம்.
ஐயா அவர்களே இந்தக் கோரிக்கை சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை
மாத்திரமல்ல இது இந்த நாட்டு முஸ்லிம்களின் கோரிக்கையாகவும் உங்களால் எடுத்துக் கொள்ளமுடியும்.
எதிர்காலத்தில் உங்களின் சில விடயங்களை அடைந்து கொள்வதற்கு கட்டாயம்
எங்களுடைய உதவி தேவை. ஒரு காலத்தில் எம்.எஸ். காரியப்பர் தமிழரசுக் கட்சியில் தேர்தல்
கேட்டு வெற்றி பெற்ரார். எம்.சி.அஹமட் தமிழரசுக் கட்சியில் தேர்தல் கேட்டார் வெற்றி பெற்றார். அப்படி ஒரு காலம்
இருந்தது. அவர்கள் விலகிச்சென்றார்கள்.அது வேறு கதை.
தற்போது சம்பந்தன் ஐயாவிடம் பந்து இருக்கின்றது. இதனைத்
தீர்க்கவேண்டிய பொறுப்பு அவரிடம் இருந்து கொண்டிருக்கிறது. எல்லாத் தரப்பினராலும் கட்சியினராலும்
அங்கிகரிக்கப்பட்ட சாய்ந்தமருதுக்கு தனியான
உள்ளூராட்சி சபையான இம்மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு உதவுமாறு
அன்பான வேண்டுகோளை விடுக்கவிரும்புகின்றோம்.
கல்முனையில் இரு இனமக்களும் பாதிக்கப்படாத வகையில் அங்கும் ஒரு
தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என பகிரங்கமாக வேண்டுகோளை விடுக்கவிரும்புகின்றோம்.
நிந்தவூரிலிருந்து பிரித்து காரைதீவுக்கு பிரதேச சபை வழங்கும்
போது மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி முஸ்லிம் மக்கள் அதற்குள் இணைக்கப்பட்டார்கள். நாங்கள்
எதிர்ப்புக்காட்டவில்லை. அதுபோன்று சம்மாந்துறையிலிருந்து நாவிதன்வெளி பிரிக்கப்பட்டபோதும்
அக்கரைப்பற்றிலிருந்து ஆலையடிவேம்பு பிரிக்கப்பட்ட போதும் முஸ்லிம்களாகிய நாங்கள் எதுவும்
பேசவில்லை, எதிர்ப்பும் காட்டவில்லை. நாங்கள் தமிழர்களுடன் ஒற்றுமையாக வாழத்தான் விரும்புகின்றோம்.
ஆகவே சம்பந்தன் ஐயா அவர்களே! கல்முனையில் உள்ள தமிழர்களுக்கும்
முஸ்லிம்களுக்கும் பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது
சபைகளை உருவாக்குவதற்கு சரியான தீர்வை எடுப்பதுடன் சாய்ந்தமருது மக்களின் தனியான
உள்ளூராட்சி சபைக்கும் தீர்வு காணல் வேண்டும் என அன்பான வேண்டுகோளை விடுக்கவிரும்புகின்றோம் இவ்வாறு. வை.எம்.ஹனிபாதெரிவித்தார்.
0 comments:
Post a Comment