அமைச்சர்களான ரவூப் ஹக்கீமும் றிசாட் பதியுதீனும்
ஒருமித்த கருத்துடன்
இணக்கப்பாட்டுக்கு வரும்பட்சத்தில் உடன் தீர்வு
அமைச்சர் பைசர் முஸ்தபா
கல்முனை மாநகர சபை சாய்ந்தமருது பிரதேச சபை தொடர்பில் அரசியல் தலைவர்கள் இணக்கப்பாட்டுக்கு வரும்பட்சத்தில் உடன் தீர்வுகாண முடியுமென உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் ஜனவரியில் நடத்தப்படவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாதென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பைசர் முஸ்தபா இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டாலும் இது குறித்து பேச்சுவார்த்தை மூலம் இணக்கம் காண்பதற்கு போதிய கால அவகாசம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர் சாய்ந்தமருது பிரதேச சபையை உடன் வழங்குவதற்கு பிரதமர் எனக்கு பணிப்புரை விடுத்துள்ளார். எனினும் அமைச்சர்களான ரவூப் ஹக்கீமும் றிசாட் பதியுதீனும் ஒருமித்த கருத்துடன் இணக்கப்பாட்டுக்கு வராமல் என்னால் இதனை அமுல்படுத்த முடியாது. ஏனெனில் அமைச்சர் என்ற வகையில் ஒழுங்கு விதி முறையைப் பின்பற்றியே செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் பைசர் முஸ்தபா கூறினார்.
ஜனாதிபதித் தேர்தலின்போது கல்முனைக்கும் சாய்ந்தமருதுக்கும் வேறுவேறான உள்ளூராட்சி
சபைகளை வழங்குவதற்கு வாக்குறுதியளிக்கப்பட்டது. எனினும் அங்கு தற்போது புதிய சூழ்நிலை தோன்றியுள்ளது. அங்குள்ள முஸ்லிம் தலைமைகள் கல்முனை மாநகர சபையை நான்காக பிரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பில் அப்பிரதேத்திலுள்ள தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளும் ஒன்றுசேர்ந்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு வருமிடத்து தீர்வை வழங்கமுடியும் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை வழங்குவது குறித்து ஏழவே தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கலந்தாலோசித்த போது அவர்கள் அதற்கு இணக்கம் தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில் கல்முனை மாநகரசபையை நான்காக பிரிப்பது குறித்து கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதால் இதற்கு தமிழ் கட்சிகள் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் இணக்கப் பாட்டையும் பெற வேண்டியிருக்கிறது. இவ்வாறு. உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment