திருமண வீட்டில் மைத்திரி, நாமல் உள்ளிட்ட
பல பிரபலங்கள்: வைரலாகும் புகைப்படங்கள்
தனியார் தொலைக்காட்சி சேவை ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றும் லஹிரு என்பவரின் திருமண வீட்டிற்கு ஜனாதிபதி உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதன்மை விருந்தினராக இருந்து குறித்த திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். இது தொடர்பிலான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவிவருகின்றன.
இவருடைய திருமணத்திற்கு இலங்கை கிரிக்கட் அணியின் சிறந்த பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் சாட்சியாளராக கையொப்பமிட்டுள்ளார். இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அருகிலிருந்து திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.
குறித்த திருமண நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, ரஞ்சன் ராமநாயக்க, ஹரின் பெர்ணான்டோ உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment