மெளலானா அவர்களே!

பாதிக்கப்பட்ட கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களின்

கண்ணீருக்கு பதில் சொல்லியாக வேண்டும்,

 வெளிமாகாணங்களுக்கு நியமிக்கப்பட்ட  எமது  ஆசிரியர்கள் இன்று  தமக்கு சேவை  செய்வார்கள் தாம்  தெரிவு  செய்தவர்களாலேயே  புறக்கணிக்கப்பட்டு தூரப் பிரதேசங்களின் பின்தங்கிய  பகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியத் தொழில் கிடைத்தவுடன்  திருமணம் செய்யலாம் எனக் காத்திருந்தவர்களுக்கு அந்தக் கனவும் பகற்கனவாகி  நமக்காக  கஷ்டப்பட்ட தாய் தந்தையரை இனிமேலாவது நன்றாக பார்த்துக் கொள்ளலாம் என எண்ணியிருந்தவர்களின் நினைப்பில் மண் போடப்பட்டுள்ளது,

ஆனால் அந்த ஆசிரியர்களின்  கண்ணீரில் அரசியல் இலாபம்  தேட முனைந்தவர்களோ ஏராளம்,அவர்களின் அரசியல் இலாபத்துக்காக ஆசிரியர்களை ஏமாற்ற அறிக்கை விட்டவர்களும் படம் காட்டியவர்களும் மன்னிக்கப்பட முடியாதவர்கள்,

பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர்  மௌலானா அவர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி தான்  இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்தாகவும் கிழக்கு மாகாண கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களை வெளி மாகாணங்களில் நியமிக்கக் கூடாது  என தாம் முன் கூட்டிய கோரிக்கை விடுத்தாகவும் கூறினார்.


அதன் பின்னர் கடந்த ஒக்ேடாபர் 24 ஆம் திகதி தாம்  மலேஷியாவிலிருந்து  கல்வியமைச்சின் செயலாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும் சுமார் இரண்டு மணி நேரம் அவருடன் பேசியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அதனடிப்படையில் இரண்டு நாட்களில் அதற்குரிய தீர்வினைப்  பெற்றுத் தருவதாகவும் செய்திகள் வெளியாகின,
அதன் பின்னர் கடந்த 26  ஆம் திகதி மௌலானா அவர்கள் தம்முடன் கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் தாம்  27 ஆம் திகதிக்குள் அனைத்து  ஆசிரியர்களையும் தமது சொந்த  மாகாணத்திலேயே நியமிப்பதாகவும் அவர் உறுதியளித்திருந்தார் ,
அதனால்  அனைத்து ஆசிரியர்களும் தமது தரவுகளை  உடன் கொண்டு வந்து   தருமாறு கோரிக்கையும் விடுத்திருந்தார்,
இதனை நம்பிய கிழக்கின் ஏனைய பகுதிகளில்   இருந்த ஆசிரியர்களும் கொழும்பின் கல்வியமைச்சின் செயலாளரை சந்திக்க செல்லவிருந்தவர்களும் தமது பயணத்தையும்  இடைநிறுத்திவிட்டு இவரை நாடிச் சென்ற போது  இவர் நாட்டில் இல்லையெனவும் தமக்கு அதுகுறித்து தெரியாதெனவும் திருப்பி அனுப்பியுள்ளனர்.
இறுதியாக மீண்டும் கடந்த 30  ஆம் திகதி தாம் 31 ஆம் திகதி  பாராளுமன்றத்துக்கு சென்று கல்வியமைச்சரை சந்தித்து கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்போவதாக அறிவித்திருந்தார்.
ஆனால் இன்று கல்வியில் கல்லூரியைச் சேர்ந்த எமது ஆசிரியையகள் கடமைகளை பொறுப்பேதற்கான இறுதி நாள் எங்கு தீர்வு கிடைத்ததா????

இறுதியாக கோப் குழுவில் இதனை ஒரு பிரச்சினையாக முன்வைப்பென் என்றீர்களே ,நான் தெரியாமல் தான் கேட்கின்றேன் ,கிழக்கான் என்றால் அவ்வளவு முட்டாள் என நினைத்தீர்களா?????
மூன்று வருடம்  கஷ்டப்பட்டு படித்து விட்டு எமக்கு தொழிலும் வேண்டாம் ஏதும் வேண்டாம் என எமது பெண்பிள்ளைகள் இன்று வீட்டில் இருக்கின்றார்கள்,
தற்பொது கல்வியியற் கல்லூரிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ள நிலையில் அதற்கு போவோமா வேண்டாமாவென சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்,
நாளை மறுமையில் உங்கள்  பொய் வாக்குறுதிகளுக்கும் போலி  அறிக்கைகளுக்கும் பதில் சொல்லியாக வேண்டும் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் ,

sanooba Rahamath





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top