கிந்தொட்ட சம்பவம் குறித்து

பொதுபல சேனா விசேட அறிக்கை



காலி, கிந்தொட்ட பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
சமூக ஊடகங்கள் சிலவற்றில் கிந்தொட்ட சம்பவத்துடன் தொடர்புபடுத்தி பொதுபல சேனாவின் பெயரில் பொய்யான பிரச்சாரங்கள் பல வெளியாகியுள்ளதாகவும் அவ்வறிவித்தலில் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
தற்பொழுதுள்ள கள நிலைமை கண்டறிந்து, விசேடமாக காயமடைந்தவர்கள் மற்றும் சொத்து சேதம் ஏற்பட்டவர்கள் தொடர்பில் தகவல்களைத் திரட்டி அப்பிரதேசத்தில் சமாதானத்தை உறுதிப்படுத்த பொதுபல சேனாவின் ஞானசார தேரர் காலிக்கு விஜயம் செய்துள்ளதாகவும் அவ்வறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.
நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கை செல்லுபடியற்றதாகவுள்ளதையும், செயற்திறனற்ற ஒரு பிரவேசம் என்பதையும் இச்சம்பவத்தினூடாக தமக்கு கண்டுகொள்ள முடியுமாகவுள்ளதாகவும் அவ்வமைப்பு மேலும் கூறியுள்ளது.
கிந்தொட்ட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பிரதேசத்தில் பெரும்பான்மையாகவுள்ள முஸ்லிம் அடிப்படைவாதிகள் சிலரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தீர்த்துக் கொள்ள முடியாமல் இனங்களுக்கிடையில் பிரச்சினையாக இது வளர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கம்பொலயில் புன்னிய பெரஹர நிகழ்வின் போது முஸ்லிம் அடிப்படைவாதிகள் சிலர் பள்ளிவாயலின் முன்னாள் இருந்து கொண்டு கல் வீசியதனால் ஏற்பட விருந்த பாரிய அழிவு தடுக்கப்பட்டது. இவ்வாறு தொடர்ந்தும் சம்பவங்கள் நடைபெறுவது பாரிய சிக்கலை ஏற்படுத்தும் என்பது எமது அவதானம் ஆகும் எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முஸ்லிம் அடிப்படைவாதமும் பயங்கரவாதமும் எமது நாட்டுக்கு மட்டுமல்ல, முழு உலகிலும் தலையிடியாக மாறியுள்ள ஒரு காலகட்டத்தில், மிகச் சிறியளவில் செயற்படும் முஸ்லிம் அடிப்படைவாதிகளை கட்டுப்படுத்த அரசியல்வாதிகளும், அரசாங்கமும், விசேடமாக முஸ்லிம் சமய தலைவர்களும் நடவடிக்கை எடுக்க முன்வராவிடின் பங்கரமான ஒரு நிலைமைக்கு நாடு உட்படும் என்பதை நாம் தெளிவாக அறிவித்துக் கொள்கின்றோம்.
எதிர்வரும் 10 வருடங்களுக்கு நாட்டில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய அம்சங்கள் குறித்து பௌத்த, இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் சமய குழுக்களுடனும், சிங்கள தமிழ் இனக் குழுக்களுடனும் பொதுபல சேனா திறந்த கலந்துரையாடல்களை ஆரம்பித்து முன்னெடுத்துச் செல்கின்றது.
இந்த நாட்டிலுள்ள சகலரும் மிகவும் நிதானத்துடனும், பொறுப்புடனும் செயற்பட வேண்டும் என பொதுபல சேனா கேட்டுக் கொள்வதாகவும் அந்த நீண்ட அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top